தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 7, 2019

இந்த ராசிக்காரர்கள் எல்லா விஷயத்துக்கும் டென்ஷன் ஆகிடுவார்களாம்.. மற்ற ராசியினரையும் தெரிஞ்சுகோங்க..!


எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என்று அலைஞ்சு திரிபவரா நீங்க. அப்படி அலைஞ்சு திரிய காரணமான மன அழுத்தம் ஏன் வருகிறது என தெரியுமா? ஆமாங்க நம்ம மன அழுத்தத்திற்கும் ராசிக்கும் கூட தொடர்பு உள்ளது என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். வெறும் தொழில், திருமண பொருத்தம், வேலை, செல்வம் மட்டுமல்ல நம்முடைய மன அழுத்தத்தை கூட இந்த ஜோதிடத்தை கொண்டு கணிக்க முடியுமாம். இந்த காலத்தில இந்த மன அழுத்தம் தான் பெரிய பிரச்சினையே. சரி வாங்க உங்க ராசிக்கு எந்த மாதிரியான மன அழுத்தம் ஏற்படும் என்பதை இங்கே காண்போம்.
மேஷம்
இந்த ராசிக்காரர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே கவலைப்பட்டு கொண்டு இருப்பவர்கள். மார்க் அதிகமாக எடுக்கவில்லை என்றால், முதல் ரேங்க் வாங்க முடியவில்லை என்றால் வருந்துவார்களாம். இதிலிருந்து தெரிய வருவது வேலைகளை சரியாக முடிக்க முடியவில்லை என்றால், அதில் திருப்தி இல்லை என்றால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இப்படி கவலை கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேறுங்கள்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் தாங்கள் சொல்வதைத் தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி எல்லா இடங்களிலும் ஆர்டர் போடுவது சாத்தியமா? இதனால் மன வேதனை வரக் கூடும். ஏனெனில் மக்கள் உங்கள் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திட்டமிட்டபடி எல்லாவற்றையும் ஒழுங்கமைக்க வேண்டும் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். ஆனால் உங்கள் சட்ட திட்டங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்
இவர்கள் இயற்கையாகவே அமைதியான சுபாவம் கொண்டவர்கள். அதிகமாக பேச மாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் கொண்டாட்டம் என்றால் பிடிக்கும். நன்றாக கவனிக்கும் திறன் கொண்டவர்கள். இவர்களின் சொந்த முயற்சி என்றால் அதைப் பற்றி அதிகமாக யோசித்து யோசித்து சீக்கிரம் மன குழப்பம் அடைந்து விடுவார்கள்.
கடகம்
இந்த ராசிக்காரர்கள் டென்ஷனாக நண்பர்களுடான சிறு சண்டை போதும். அவர்கள் பேசும் வார்த்தைகள், இவர்களைப் பற்றி கூறும் அவதூறுகளை நினைத்து மன அழுத்தம் அடைந்து விடுவார்கள். உங்களின் அமைதி குலைந்தால் போதும் ஏகப்பட்ட டென்ஷன் மண்டைக்குள் வந்து விடும். உங்கள் நண்பர்கள் கவலைபட்டால் கூட அந்த கவலை உங்களையும் தொற்றிக் கொள்ளும். எனவே அமைதி தான் உங்களுக்கு தேவை.
சிம்மம்
இந்த ராசிக்காரர்களுக்கு வேலை தான் மிகப்பெரிய மன அழுத்தம். காரணம் இவர்களுடைய வேடிக்கை, பொழுது போக்கு நேரங்களில் வேலை செய்ய நேர்ந்தால் மிகவும் டென்ஷனான ஆளாக மாறி விடுவார்கள். அதே மாதிரி வேலையில் கூட வேடிக்கையான அம்சங்களை இவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படி இல்லையென்றால் அந்த வேலையும் இவர்களுக்கு பிடிக்காது அதே நேரத்தில் மன அழுத்தமும் வந்து தொற்றிக் கொள்ளும்
கன்னி
இந்த ராசிக்காரர்களுக்கு கூட்டம் என்றாலே பிடிக்காது. அதை புறக்கணிக்கவே விரும்புவார்கள். தங்களை எப்போதும் பாதுகாப்பாக வே வைத்துக் கொள்வார்கள். யாரும் இல்லாமல் தனியாக இருக்கும் போது மட்டுமே இவர்கள் தங்கள் ரகளைகளை வெளிப்படுத்துவார்களாம். எனவே யாராவது இவர்களை கவனித்தாலோ அல்லது ஒரு வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ செம டென்ஷனாகி விடுவார்களாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் என்றாலே நீதியை கடைப்பிடிப்பவர்கள். எனவே இவர்களுக்கு வேலை என்றாலே நியாயத்துடன், நேரத்துடன் முடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள் . இதில் எதாவது இடையூறு ஏற்பட்டாலோ அல்லது சமநிலை இல்லை என்றாலோ டென்ஷனாகி கத்த ஆரம்பித்து விடுவார்கள்.
தனுசு
இந்த ராசிக்காரர்களுக்கு சகிப்புத்தன்மை, பொறுப்பு என்றாலே ஆகவே ஆகாது. எனவே இவர்கள் கையில் எதாவது ஒரு பொறுப்பை கொடுத்தாலே போதும் டென்ஷனாகி ஓடி விடுவார்கள். ஏனெனில் அதில் வரும் தடைகளை இவர்களால் தாங்கிக்கவே முடியாது. பொறுமையும் இவர்களுக்கு கிடையாது. இதனால் வேலைகளில் தாமதம் ஏற்படும் போது டென்ஷனாகி போய் விடுகிறார்கள்
மகரம்
இந்த ராசிக்காரர்கள் தங்களை எப்பொழுதும் சீரியஸாக வைத்துக் கொள்வார்கள். எனவே முக்கால் வாசி மன அழுத்தம் இவர்களால் தான் வருகிறது. வெளியே இருந்து யாரும் இவர்களுக்கு மன அழுத்தம் தர வேண்டாம். சமைக்கும் போது கருக விடுவது, உணவை துணிகளில் கொட்டி விடுதல் போன்ற போன்ற சின்ன சின்ன விஷயங்களை தவறாக செய்யும் போது இவர்களுக்கு மன அழுத்தம் வந்து விடுகிறது. எனவே சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். சீரியஸாக இருப்பதை விடுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் என்றாலே வெளியே இருந்து வரக் கூடியது. எனவே உங்கள் திட்டப்படி செயல்கள் எதுவும் நடக்காவிட்டால் உடனே டென்ஷனாகி விடுவீர்கள். ஆனால் உங்ககிட்ட இருக்கிற ஒரு நல்ல விஷயம் அதையே பிடிச்சு தொங்க மாட்டீர்கள்
மீனம்
இந்த ராசிக்காரர்கள் கவலைப்பட முடிந்து போன விஷயங்கள் போதும். பழசையே நினைச்சு நினைச்சு வருந்துவார்களாம். எனவே முடிந்து போனதை பற்றி நினைக்காமல் நிகழ் காலத்தில் வாழுங்கள். மன அழுத்தம் மறைந்து விடும்.

No comments:

Post a Comment