தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, February 20, 2019

இந்த ராசிக்காரர்கள் மட்டும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமாம்.. இந்த நோய் உங்களது உயிரையே பறித்து விடுமாம்!


கிரகங்களுக்கும் ஏற்றபடி, அந்த கிரகங்களுடைய செயல்பாடுகள் அந்த ராசியில் பிறந்த நம்மையும் பாதிக்கும் என்று சொல்லப்படுகின்றது.
கிரகங்களின் குணங்களுக்கும் அதன் பயணங்களின் தன்மைக்கும் ஏற்றபடி ஒவ்வொரு கிரகங்களும் அதற்குரிய பலன்களை அந்த ராசியில் பிறந்த நமக்குக் கொடுக்கும்.
அந்தவகையில் ஒவ்வொரு ராசியினருக்கும் சில குறிப்பிட்ட நோய்கள் அவர்களுடைய வாழ்நாளில் அவர்களைத் தாக்கும். இங்கு ஒவ்வொரு ராசியினருக்கும் என்ன என்ன நோய்கள் அவர்களை வந்தடையும் என்பதை பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மூளை, தலை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சினை வருவதில்லை.
அவர்களின் மூளை மிக துரிதமாக எவ்வளவு வேலையாக இருந்தாலும் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்டதாக இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் அதை இரண்டு மடங்கு ஆற்றலுடன் செய்து முடிப்பார்கள்.
இவர்களுடைய மூளை எப்படி வேகமாகச் சிந்திக்கிறதோ அதேபோல கோபமும் எரிச்சலும் அதிகமாக வரும்.
அதனால் இவர்கள் அடிக்கடி தலைவலி மற்றும் பல் வலி ஆகிய பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். இது அவர்களுக்கு மிக இயல்பான ஒன்றாகவே அவர்களுடைய வாழ்க்கையில் மாறிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்சுலின் உற்பத்தி சுரப்பு குறைவாக இருக்கும். இதனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்.
ஏனென்றால் தொண்டைப் பகுதி மற்றும் உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி சுரக்கின்ற கீழ்தாடைப் பகுதியை கட்டுப்படுத்தும் வேலையைத் தான் ரிஷப ராசிக்காரரின் ஜென்ம கிரகமான சுக்கிரன் செய்கிறது.
பொதுவாக சுக்கிரன் வலுவாக உள்ள ரிஷப ராசிக்காரர்கள் அழகான உறுதியான பற்களைக் கொண்டிருப்பார்கள்.
காது கேட்கும் திறனும் கூர்மையாக இருக்கும். அதேசமயம் அடிக்கடி சளி, காய்ச்சல் தொல்லை ஏற்படும்.
இதுவே சுக்கிரன் வலுவற்ற நிலையில் உள்ள ரிஷப ராசிக்காரர்களாக இருந்தால் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தைராய்டு, டான்சில், காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து போகும்.
மிதுனம்
மிதுன ராசியை ஆள்கின்ற கிரகம் என்றால் அது புதன். இந்த புதன் கிரகம் நம்முடைய மூட்டுக்கள் மற்றும் சுவாச அமைப்பை ஆட்சி செய்கிறது. அதனால் பொதுவான மிதுன ராசிக்காரர்கள் அடிக்கடி சளிக்கு ஆளாவார்கள்.
வலுவற்ற நிலையில் உங்களுடைய ராசிநாதன் இருக்கும் பொழுது தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசை நாண் அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி உடல் சுகவீனம் அடைவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு உரிய ராசிநாதன் யார் என்றால், அது சந்திரன் தான். சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் சந்திரன் உள்ளதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
அதிக அளவிலான உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிப் பொங்கும் வகையில் உள்ள கடக ராசிக்காரர்கள் செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாகுவார்கள்.
சந்திரனின் ஆளுமைத் தன்மையின் காரணமாக தங்கள் கோபம் அல்லது வலியை அவர்களால் எளிதில் கடந்து போக முடியாது. குடல் பிரச்சனைகள், வயிற்றில் அல்சர் மற்றும் செரிமானக் கோளாறு ஆகியவற்றால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு உரிய அதிபதி சூரியன் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் கொண்டு சீராக இயங்கும் ஆற்றல் கொண்டது.
அதனால் அவர்கள் எப்போதும் அதிகார தன்மையுடன், வாழ்க்கையில் அதிக தன்னம்பிக்கையுடன் விளங்குவார்கள். இருந்தாலும் கூட, சிம்ம ராசி வலுவிழக்கிற நேரங்களில் இதயக் கோளாறு, உடல் சோர்வு மற்றும் முதுகுத்தண்டு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.
கன்னி
கன்னி ராசியானது நாவினை ஆளக் கூடியது. என்ன உணவு உண்ண வேண்டும் என்பதையும், நம்முடைய நாக்கின் சுவை அரும்புகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
அனைத்து உறுப்புகளையும் ஆளன்கூடியது கன்னி. அதனால் இயற்கையாகவே, அது வயிற்றையும், குடல்களையும் ஆளக்கூடியது.
எதெற்கெடுத்தாலும் ஓடிக் கொண்டே இருக்கும் அவர்கள் பொதுவாக எல்லாவற்றிலும் அவசரமாக இருப்பார்கள். அவர்கள் மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான உடல் மற்றும் மன உளைச்சலில் இருப்பார்கள்.
அதனால் உணவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரும்.
துலாம்
நல்ல அமைதியான வாழ்க்கையையே துலாம் ராசிக்காரர்கள் விரும்புவார்கள். தங்களைச் சுற்றிலும் எப்போதும் சந்தோஷம் நிறைந்த குதூகலமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். எதிலும் ஒரு அழகும் நேர்த்தியும் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.
சுக்கிர கிரகத்தால் ஆளப்படுகின்ற துலாம் ராசிக்காரர்கள் சிறுநீர்க்குழாய் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை பாதிப்பு ஏற்படும்.
எப்போதும் இன்பத்தால் செழித்தோங்கும் துலாம் ராசிக்காரர்கள் எதையுமே அளவுக்கு அதிகமாக செய்யாமல், உங்களிடம் இருப்பதைப் பராமரிக்க கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால், அவர்கள் துயரத்தில் ஆழ்த்தப்படுவார்கள். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் அடுத்தவர்கள் மீது கொஞ்சம் பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு சொந்தமானது என நினைப்பவற்றின் மீது அவர்கள் ஆட்டிப்படைக்கும் மற்றும் சொந்தம் கொண்டாடும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
சீரற்ற மாதவிடாய், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுக்கள் போன்றவைகள் இவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் ஆகும்.
தனுசு
குருவால் ஆளப்படும் தனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
எதிலும் நம்பிக்கை இருக்க வேண்டியது தான். ஆனால் அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர்களின் பார்வையை பாதிக்கும் என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.
முதுகெலும்பில் காயங்கள் உண்டாகலாம். உணவு மற்றும் பிற பொருள்களின் வாயிலாக நச்சுத்தன்மை போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும்.
மகரம்
எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் முழு மூச்சாக ஈடுபட்டு வெற்றியை நோக்கிச் செல்லும் குணம் கொண்டவர்கள் தான் மகர ராசிக்காரர்கள்.
மிகவும் கடின உழைப்பாளியான மகர ராசிக்காரர்களுக்கு எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும் தன்மை கொண்டதாக இருக்கும்.
குணத்தில் பிடிவாதம் நிறைந்தவர்களான இவர்கள், கடினமாக உழைத்து தங்கள் லட்சியங்களை அடைவார்கள். இதன் காரணமாகவே அவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்க ஆரம்பிக்கும்.
கும்பம்
எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதை வெளியே காட்டி அடுத்தவர்களைக் கஷ்டப்படுத்தாமல், சந்தோஷமாக இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும். நரம்புகளின் ஓட்டத்திற்கும், உந்து விசைக்கும் அவர்களுடைய ராசிக்கு பொறுப்பாகும்.
வேலை நேரங்களில் அவ்வப்போது சின்ன சின்ன இடைவேளைகள் எடுத்துக் கொண்டு, தங்களுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கவில்லை என்றால் இதய நோய்கள், கீழ்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள்.
மீனம்
அனிச்சைகளையும் நரம்பியல் அமைப்பையும் ஆளுகின்ற ராசியாக இருப்பது தான் மீன ராசி. அவர்களுடைய நடைமுறைக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போவதால், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.
இது அதிகமாகும் போது, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழக்கச் செய்யலாம். அதன் காரணமாக ரத்த அழுத்தம், இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என பல வியாதிகளை அவர்களுக்கு உண்டாக்கிவிடும்

No comments:

Post a Comment