தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 ஜூலை, 2018

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் சிலை! நீங்கா மர்மத்துடன் காணப்படும் ஆலயம்

பெண்கள் மாதாமாதம் சந்திக்கிற பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய், பொதுவாக பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலம் மிகவும் சிக்கலானது என்றே சொல்ல வேண்டும். ஆனால் குவஹாத்தியில் உள்ள ஆலயம் ஒன்றில் மாதவிடாய் காலங்களில் மட்டும் அங்குள்ள தேவிக்கும் இரத்தம் வழிகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஆம்,குவஹாத்தியில் உள்ள நிலச்சல் மலைப்பகுதியில் காணப்படும் இந்த காமாக்யா அர்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்றில் இந்நிகழ்வு மாத மாதம் நடைபெறுகிறது.
இவ்வாலயம் உள்ள மதவழிப்பாட்டு தளங்களுள் ஒன்றாகவும் தனித்தன்மை நீங்கா தோற்றத்துடனும் காணப்படுகிறது.
இவ்வாலயம் காமாக்யா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 51 சக்தி பீடங்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது.

இந்த ஆலயம் 8லிருந்து 17ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டதாக வரலாற்று சுவடுகள் கூறுகின்றது.
மேலும் இந்த ஆலயம், கோச் வம்சத்தின் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இவ்வாலயத்திற்கு என்று ஒரு புராணக்கதை ஒன்றும் சொல்லப்படுகின்றது.
சத்தி தேவி தன் ஆசைக்கிணங்க சிவபெருமானை கட்டி அணைக்க இங்கே வந்ததாகவும், சிவதாண்டவம் ஆடியபடி சக்தியின் உடலை சுமந்து கொண்டு சிவபெருமான் வர அப்பொழுது அவளுடைய கர்ப்பம் கலைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் வேதங்களின் மூலம் உணரப்படுவது இந்த காமாக்யா, 4 சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், மற்ற மூன்றும் பூரியில் உள்ள விமலா ஆலயத்திலும், பிரம்மபுரா அருகில் உள்ள தரா தரினி ஆலயத்திலும், கொல்கத்தாவில் உள்ள தக்கினா கலிகா ஆலயத்திலும் அமைந்திருப்பதாகவும் புராணங்கள் கூறிப்பிடப்டுகின்றது.
இந்த சன்னதி வருடத்தில் ஒரு சில நாள்கள் மூடியே இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
மாதவிடாய் சமயங்களில் எந்த சடங்குகளும் நடத்தப்படுவதில்லை என்றும், இருப்பினும் இந்த சமயத்தில் பல பக்தர்கள் இங்கே வருகிறார்கள் என்றும் அங்குள்ளவர்கள் இந்த ஆலயத்தின் பெருமையை பறைசாற்றுகின்றனர்.

மாதவிடாய் மூன்று நாட்கள் மூடப்படும் இந்த ஆலயம், மீண்டும் நான்காவது நாள் திறக்கப்பட்டு பெரிய முறையில் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இக்கோயிலின் இயற்கை நீரூற்று, இந்த நேரங்களில் சிவப்பு நிறமாக மாறும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தேவியின் மாதவிடாய் சுழற்ச்சி காரணமாக இரத்தம் அவள் மேல் வழிவதாகவும், அதனாலே இந்த ஆலயம் அந்த மூன்று நாட்கள் மூடப்படுவதாகவும் ஜதீகம்.


http://news.lankasri.com/special/03/184316?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக