தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 ஜூலை, 2018

4500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புகளில் காணப்பட்ட மர்மம்

உக்ரேன் ஆய்வாளர்கள் இதுவரையில் அறிந்திராத ஆச்சர்யமான விடயமொன்றை தற்போது கண்டுபிடித்துள்ளனர், அது இளம் பெண்ணின் எலும்புகள் ஆகும்.
இவை கிட்டத்தட்ட 4500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதில் ஆச்சர்யம் அது கருப்பு புள்ளிகாளால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தமையே.
இது 25 - 30 வயதுடைய பெண்ணின் வன்கூடு என மதிக்கப்படுகிறது. உண்மையில் இது சில வருடங்களின் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
ஆய்வில் இரு முழங்கைகளிலும் சமாந்தர கோடுகள் காணப்பட்டமை ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. முதலில் இவை விலங்ககளினால் இடப்பட்ட சுவடுகள் என அனுமானிக்கப்பட்டிருந்தது.

தற்போது இரசாயன ரீரிதியாக பரிசீலிக்கப்பட்டதில் அவை எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது என்பது தொடர்பாக அறிய முடிந்திருக்கிறது.
இது வேண்டுமென்றே இன்னுமொரு மனிதனால் மரத் தார் போன்ற கருப்பு பொருளால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என தெரியவருகிறது.
இதில் மேலும் சுவாரசியம் யாதெனில் இது அவருடைய இறப்பிற்கு பின்னர் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதிலும் பார்க்க அவ் உடல் உக்கிய பின்னரே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் வியப்பளிக்கிறது.
அதாவது இது புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டு உடற் கூற்றியல் முறையில் ஒழுங்குபடுத்தி புதைக்கப்பட்டுள்ளது.
இது போன்று வேறு எந்த எலும்புகளும் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.
இதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட முடியாவிடினும் அப் பெண்மணி மிக முக்கியமான ஒருவராக இருக்க வேண்டும் என யூகிக்கப்படுகிறது.

http://news.lankasri.com/othercountries/03/184457?ref=ls_d_world

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக