இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதி.
தமிழக அரசியலில் சாணக்யன் என கூறப்படும் கருணாநிதி 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். 2006ல் மே 13 ஆம் திகதி ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.
தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
கருணாநிதி தமிழரா?
கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், குறிப்பாக அவர் தமிழரா? என்ற விமர்சனம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.குறிப்பாக, எம்ஜிஆர், கருணாநிதியை பார்த்து நீங்கள் தமிழரா? என்று கேட்ட கேள்வி 1978 ஆம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்டு, கருணாநிதியின் மூதாதையர் குறித்து விமர்சிக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் கேட்ட கேள்வி: தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழரா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?
என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும்.
அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது.
இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்சனையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும் என்று கூறினார்.
பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழில் இது வெளியானது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/india/03/184539?ref=rightsidebar-manithan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக