தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, July 27, 2018

ஜேர்மானியர்களின் விநோதமான நம்பிக்கைகள்!!

மேற்கத்திய நாடுகள் பயப்படும் வெள்ளிக்கிழமை 13ஆம் திகதியைப் போலவே ஜேர்மனியில் பின்பற்றப்படும் சில மூட நம்பிக்கைகளைப் பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.
அவற்றில் முக்கியமான சில  நம்பிக்கைகள் எவை தெரியுமா?
1. நாடகத்தில் நடிக்கத் தொடங்கும் முன் சக நடிகரின் தோளில் எச்சில் துப்ப வேண்டும்.
மொத்த உலகிலும் நாடக அரங்கங்கள்  நம்பிக்கைகள் அதிகம் உலாவும் இடங்கள் என்றே கூறலாம்.
ஜேர்மனியும் அதற்கு விலக்கல்ல... பிரித்தானிய மற்றும் அமெரிக்க மேடை நாடக நடிகர்கள், நாடகம் தொடங்கும் முன் ஒருவரையொருவர் பார்த்து ”காலை உடை” என்று கூறுவார்களாம்.
துரதிர்ஷ்டத்தை தவிர்ப்பதற்காக அவர்கள் அவ்வாறு கூறுவார்களாம். ஆனால் ஜேர்மனியில் ஒரு படி மேலே போய், நடிகர்கள் தங்கள் சக நடிகர்களில் இடது தோளில் துப்புவார்களாம், அதுவும் ட்ரெஸ் பண்ணிய பிறகுதான் இதைச் செய்ய வேண்டும், இல்லையென்றால் பலிக்காது.
2. கை கட்டை விரல்களை அழுத்திப் பிடித்துக் கொள்ளுதல்
பேச்சாளர்கள் பேசும்போது அதிர்ஷ்டத்திற்காக தங்கள் கை கட்டை விரல்களை அழுத்திப் பிடித்துக் கொள்ளுவார்களாம்.
இது முற்காலத்தில் ரோம் கிளேடியேட்டர்கள் சண்டையிடும்போது தோற்றவனைக் கொல்வதா விட்டு விடுவதா என்பதைத் தீர்மானிப்பதற்காக அரசர் கைகளால் சமிக்ஞை காட்டுவதற்கு பயன்படுத்தும் ஒரு அடையாளமாகும்.
தம்ப்ஸ் அப் என்றால் தோற்றவர் தலை தரையில் உருளும், பெருவிரலை அழுத்தி பிடித்துக் கொண்டால் அவரை விட்டு விடுவார்கள்.
3. ஒருபோதும் கத்திகளை பரிசாகக் கொடுக்கக்கூடாது
கத்திகளைப் பரிசாக கொடுத்தால் நீங்கள் உங்கள் நட்பைத் துண்டித்துக் கொள்வதாக பொருள் கொள்ளப்படும்.
4. ஒருவரின் பிறந்த நாள் வருவதற்குமுன் அவரை வாழ்த்தக்கூடாது
ஜேர்மனியில் ஒருவரது பிறந்த நாள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கூட அவரை வாழ்த்தக்கூடாது. அது அபசகுனமாக கருதப்படும்.
5. மெழுகுவர்த்தியில் சிகரெட்டைப் பற்ற வைக்கக்கூடாது
ஒவ்வொரு முறை மெழுகுவர்த்தியில் சிகரெட்டைப் பற்ற வைக்கும்போதும் கடல் பயணத்திற்கு செல்லும் ஒருவர் இறக்கிறார் என்று பொருளாகும்.
பழங்காலத்தில் கடல் பயணத்திற்கு செல்லாத நாட்களில் அவர்கள் தங்கள் பிழைப்பிற்காக தீக்குச்சிகளைச் செய்வார்களாம்.
ஆகவே தீக்குச்சிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தினால் நாம் அவர்களது பிழைப்பைக் கெடுப்பதாக பொருள் கொள்ளப்படும்.

http://news.lankasri.com/germany/03/184315?ref=ls_d_germany

No comments:

Post a Comment