தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

காசி விஸ்வநாதரை வழிபடுங்கள்!!!



காசி விஸ்வநாதரை வழிபடுங்கள்
********************************
ஆதிசங்கரர்-

'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனை குறிக்கிறது.

சந்திரனும் சூரியனும் அக்கினியும்
முன்று கண்களாய் கொண்டவர்.

தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் சூரியன்.

தெய்வ அன்னையான கவுரியை தன்
இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவர்.

கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும்,
ரமணீயமானத் தோற்றமளிக்கும் சடைமுடி உடையவர்.

வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிககள் மற்றும் தேவர்களாலும் வழிபடப்பட்டவர்.

தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு
நெஞ்சில் அடக்கிய நீலகண்டன்.

மந்தாரை மலரும் இதர மலர்களும்
சிவனை அணி செய்கின்றன.

தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவர்.

நெற்றிக்கண் அக்னியால் காமனைச் சுட்டெரித்தவர்.
சந்திரனால் அழகு பெற்ற கிரீடம் உடையவர்.
நாகேந்திரனை மாலையாகக் கொண்டவர்.
திசைகளை ஆடையாக உடையவர்.
வேள்வியின் சொரூபம் சிவன்.
சிவன் வாரணாசீபுரத்தின் பதி.
நந்தியின் நாதன் சிவன்.
வெண்ணீறு பூசுபவர்.
நாராயணப் பிரியன்.
மகேஸ்வரர்.
நித்தியர்.
பூரணர்.
அச்சிவனை நான் வணங்குகிறேன்.

ஆசைகள் யாவற்றையும் துறந்தும்,
பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும்,
பாவவினைகள் பால் பற்று விடுத்தும்,
மனதைச் சமாதி நிலையில் திருப்பியும்,
இதயத்தாமரையில் அமர்ந்துள்ள
விஸ்வநாதரை தியானம் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக