தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 டிசம்பர், 2012

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2



2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என மத ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியாகக் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக நம்பப்பட்டு வருகின்றது.
(அச்சப்பட்டு) இந்த அச்சத்தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்பர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video conference) மூலம் உலக அழிவு குறித்து பொது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

இக் கூட்டத்துக்கு சமூக ஊடகப் பாவனையாளர்களும் அழைக்கப் பட்டிருந்தனர். மேலும் இதில் விவாதிக்கப்பட்ட உலக அழிவுகள் குறித்தும் அவை எவ்வாறு ஆதாரமற்றவை என நாசா கொடுத்த விளக்கமும் கீழே

(முதல் மூன்று விளக்கங்களையும் பகுதி 1 இல் காண்க)

4.கொல்லும் விண்கல் :

டிசம்பர் 21 ஆம் திகதி ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியுடன் மோதி மனித இனத்துக்கு அழிவைக் கொண்டு வரும் என்பதே இந்நம்பிக்கையாகும். இதற்கு நாசா கொடுக்கும் விளக்கம் பூமியின் வளி மண்டலத்தால் முற்றாக எரிக்கப் படாது அதன் தரையை ஒரு விண்கல் அடைய 40 மீற்றர் விட்டமுடைய விண்கல் தேவை. மேலும் இக்குறுகிய விண்கற்கள் கூட சராசரியாக 500 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூமியைத் தாக்குகின்றன. இந்நிலையில் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கி பாரிய சேதத்தை விளைவிக்க சில ஆயிரம் முதல் பல இலட்சம் ஆண்டுகள் எடுக்கும்.

இதற்குக் காரணம் தொலைக்காட்டிகளால் நோக்கப் படும் பிரபஞ்ச வெளிப்பகுதியில் கண்ணுக்குத் தென்படாத ஒரு இடத்துக்கு விண்கல் ஒன்று புக இவ்வளவு காலம் ஏற்படும் என்பதுடன் அப்படிப்பட்ட ஒரு விண்கள் பார்வை வலயத்துக்கு வந்து விட்டால் அது பூமியைத் தாக்க பலவருடங்களுக்கு முன்னரே எதிர்வு கூறப்பட்டு விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரலாற்றில் நடைபெற்றிருப்பதாக ஊகிக்கப்படும் மிகப் பெரிய விண்கல் தாக்குதல் இற்றைக்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கியதில் அக்காலத்தில் கோலோச்சியிருந்த டைனோசர்கள் முற்றாக அழிய நேரிட்டது கூறப்படுகின்றது.

5.சூரிய சூறாவளி :

டிசம்பர் இறுதியில் சூரியனில் மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்டு பூமியின் காந்தப் புலங்கள் தகவற் தொடர்பாடல் அனைத்தும் பாதிக்கப் படும் என்பதுடன் சூரியனில் இருந்து பூமிக்குத் தாக்கும் அபாயகரமான கதிர் வீச்சினால் உயிரினங்கள் அழியும் என்பது நம்பிக்கையாகும். இது குறித்து நாசா விளக்கமளிக்கையில் சாதாரண சூரியப் புயல் ஒரு ஒழுங்கில் ஒவ்வொரு 11 வருடங்களுக்கு ஒரு முறையே எப்போதும் நிகழும் ஒன்று எனவும் இதனால் சில செய்மதிகளின் தொடர்பாடல் பாதிக்கப் பட்டிருப்பதும் உண்மை தான். ஆனால் 2012- 2014 காலப்பகுதியில் ஏற்படவுள்ள சூரியப் புயல் அவ்வளவு தீவிரமாக இருக்காது. இந்நிலையில் சூரியப் புயலினால் பாதிப்படையாது இயங்கக் கூடிய நவீன தொலைத் தொடர்பு சாதனங்களை உருவாக்க அமெரிக்கா முனைப்புடன் உள்ளது.

இதேவேளை நாசாவின் 'Ask asn Astrobiologist'' எனும் இணையத்தளத்தில் 2012 உலக அழிவு குறித்து இதுவரை 5000 கேள்விகள் பதியப் பட்டுள்ளன. இதில் 400 முக்கியமான கேள்விகளுக்குப் பதிலும் தரப்பட்டுள்ளது என நாசா கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக