தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

அலையும் தமிழ்க்குடிகள்: நாடோடியம் பற்றி சில கேள்விகள்

குழந்தைகளுக்கு மொட்டையிடுதல், காதுகுத்தல் போன்ற சடங்குகளை இங்கு நடத்துகின்றனர். பூப்புனித நீராட்டுவிழா, திருமணம், புதுவீடுகட்டுதல் போன்ற சடங்குகளைச் செய்யும் முன்னர் அய்யனாருக்கு முதல் பத்திரிகை வைக்கின்றனர். அய்யனாரின் அனுமதி பெற்ற பின்னரே அவற்றைச் செய்கின்றனர்.இதனை எவ்வாறு அணுகுவது? இந்நிகழ்வுகள் வெறும் கோயில், சமயம், தெய்வ நம்பிக்கை, சடங்கு சார்ந்தவை தானா? அல்லது ஒவ்வொருமுறை கள்ளர்வெட்டுத் திருவிழாவிற்கு வரும்போதும் தங்களின் பூர்வீகமான இடத்தோடு பூர்வீகத்தோடு உள்ள தொடர்பை, நெருக்கத்தைப் புதுப்பித்துக் கொள்கிறார்களா? வெளியூர்களிலிருந்து வருகின்ற பெருவாரியான மக்களுள் எவரும் வசதிக் குறைந்தவர்கள் அல்லர், அவர்களுக்கு எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன. அந்தந்த இடங்களில் கருக்குவேல் அய்யனார் கோவிலையோ அல்லது குலதெய்வமாக விளங்கும் பரிவார தெய்வங்களையோ பிடிமண் தெய்வமாக அமைத்துக்கொண்டுள்ளனர். பிறகு ஏன் அவர்களால் தேரிக்காட்டிற்கு வருவதை நிறுத்திக்கொள்ள இயலவில்லை. இதனை வெறும் குடும்பச் சுற்றுலா போல நினைக்கிறார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக