ஒரு பார்வையற்ற பெண் உலகை வெறுத்தாள். அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். தனக்கு பார்வை கிடைத்தால் அவனை மணந்து உலகை வலம் வர ஆசைப்பட்டாள். ஒரு நாள் அவளுக்கு கண்கள் தானமாக கிடைத்தன. பார்வை பெற்ற அவள் முன் அவளுடைய காதலன் நின்றான். நாம் திருமணம் செய்து கொள்வோமா என்று கேட்ட அவனைப் பார்த்த அவள் அவனை நிராகரித்தாள். ஏனென்றால் அவன் பார்வையற்ரவனாக இருந்தான். கண்ணீருடன் அவளிடமிருந்து விடை பெற்ற அவன் ஒரு காகிதத்தை அவளிடம் கொடுத்து சென்றான். அவன் போன பின் அந்த காகிதத்தை பிரித்து படித்தாள் அந்த பெண். அதில் " என் கண்களை பத்திரமாக பார்த்துக் கொள்" என்று எழுதியிருந்தது.
இப்படித்தான் மனித மனம் நிலமை மாறும் போது தன்னை மாற்றிக் கொள்கிறது.
வாழ்க்கை கடவுள் தந்த பரிசு.
பிறரிடம் ஒரு கடும் சொல்லை சொல்லுமுன் வாய் பேச முடியாதவர்களை நினைத்து பாருங்கள்.
உங்கள் சாப்பாட்டை குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்து பாருங்கள்.
உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கை துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்து பாருங்கள்.
உங்கள் குழந்தைகளை குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்து பாருங்கள்.
உங்களுடைய வீட்டை குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள்.
உங்களுடைய வேலையை குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்.
சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது கடவுள் தந்த வாழ்க்கை என்ர பரிசுக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்னகை தவழ விடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக