தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 3, 2018

பெற்றோர்கள் கவனத்திற்கு: கணினி மற்றும் கைப்பேசிகளில் ஆபாச தளங்களை தடை செய்வது எப்படி?


இன்றைய இணையதள உலகில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்துள்ளன.
குறிப்பாக இணையதளங்களில் உள்ள ஆபாச தளங்கள், புகைப்படங்கள் இளம் வயதினரை தவறான பாதைக்கு கொண்டுச் சென்றுவிடுகின்றன.
மேலும், தற்போதைய சூழலில் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை வைத்து விளையாடுவது சர்வ சாதாரண விடயமாக மாறிவிட்டது. அவர்கள் ஆபாச தளங்களை பார்த்து பாதித்து விடாமல் இருப்பதற்கு செய்ய வேண்டியது, கணினி மற்றும் கைப்பேசியில் இணையத்தை உபயோகிக்கும் போது ஆபாச தளங்களை தடை செய்வது தான்.
அதற்கான வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.

Safe Search Mode

ஆபாச தளங்களை Block செய்ய உள்ள வழிமுறைகளில் ஒன்று Safe Search Mode. இதன் மூலம், ஆபாச இணையதளங்களை கணினியில் மட்டுமின்றி, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் Block செய்ய இயலும்.
இந்த Filter மூலமாக ஆபாச தளங்கள் உட்பட தேவையில்லாத எந்த தளத்தையும் அனுமதிக்காது. அத்துடன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும், Google search முடிவுகளில் இவை தடை செய்துவிடும்.
Step 1: கூகுளில் சென்று ஏதாவது ஒன்றை Search செய்ய type செய்ய வேண்டும். அதில் வலது ஓரத்தில் setting Icon இருக்கும். அதனை Click செய்து, அதில் உள்ள Search setting என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
Step 2: பின்னர், இந்த Search setting-யில் Filter Explicit Result என்பதை Click செய்து, அதன் பின்னர் Save செய்ய வேண்டும்.
Step 3: Search setting செய்து முடித்த பின்பு, Strict setting செல்ல வேண்டும். இதன்மூலம், உங்களின் கூகுள் கடவுச்சொல் இல்லாமல், கூகுளை திறக்க முடியாது. இது குழந்தைகள் ஆபாசத்தை பார்ப்பதை தடுக்கும்.

Strict Search

கைப்பேசியில் ஆபாச தளங்களை Block செய்ய இந்த வழிமுறையை கையாள்வது சிறந்தது.
Step 1: முதலில் கூகுள் பக்கம் சென்று பின்னர் setting பகுதியை click செய்ய வேண்டும்.

Step 2: setting சென்ற பின்னர் Safe Search-யில் உள்ள Strict என்ற பகுதியில் உள்ள Safe Search Filter என்ற option-ஐ Click செய்ய வேண்டும்.
Step 3: Safe Search Filter-யில் Scroll செய்து, அதில் உள்ள Save என்ற option-ஐ Click செய்ய வேண்டும்.
Google Map மூலம் ஆண்ட்ராய்டு, ஐபோன், ஐபேட்களில் Safe Search Mode-ஐ Enable செய்யும் முறை
ஆண்ட்ராய்டு
கூகுள் செயலியை open செய்து, அதன் இடது மேற்புறம் உள்ள Setting சென்று, அதில் உள்ள Search setting-ஐ Click செய்ய வேண்டும்.
பின்னர், அதில் உள்ள Safe Setting Filters என்ற பகுதிக்கு சென்று Safe search-ஐ Turn on செய்ய வேண்டும். பின்னர் Filter Explicit Result சென்று அதனை Save செய்ய வேண்டும். இதன்மூலம் கணினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் ஆபாச தளங்களை Block செய்யலாம்.

DNS மூலம் Block செய்தல்

DNS setting மூலம் ஐபோன், ஐபேட், ஆண்டராய்டு கைப்பேசிகளில் ஆபாச தளங்களில் Block செய்யும் முறைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஐபோன்
Step 1: Setting சென்று அதன் பின்னர் Wifi icon-ஐ Click செய்து அதனை Turn on செய்ய வேண்டும்.
Step 2: Wireless provider section சென்று, ‘I' எனும் icon-ஐ Click செய்ய வேண்டும்.

Step 3: அதன் பின்னர், DNS சென்று அதில் உள்ள DNS எண்ணை set செய்ய வேண்டும். அந்த எண் 192.110.1.2.223 என்ற வகையில் இருக்கும். இந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு, பின் அந்த எண்ணை அழித்துவிட வேண்டும். பின்னர், DNS Provider-ஐ சேர்த்தால் பாதுகாப்பான தளங்கள் மட்டுமே Open ஆகும்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் பழைய முறைக்கு செல்ல 208.67.222.123’’ அல்லது ‘’208.67.220.123 என்ற எண்களை பயன்படுத்தவும்.
ஆண்ட்ராய்டு கைப்பேசிகள்
Step 1: முதலில் setting சென்று Wifi on செய்ய வேண்டும்.
Step 2: தற்போது உள்ள Connection-ஐ தெரிவு செய்து அதில் உள்ள Modify Network என்பதை தெரிவு செய்து, பின்னர் Show advance option செல்ல வேண்டும். இதில் உள்ள IP setting-ஐ மாற்ற வேண்டும்.
Step 3: இதில் உள்ள DNS எண்களுக்கு பதிலாக 208.67.222.123, 208.67.220.123 என்ற எண்களை பயன்படுத்த வேண்டும்.

Windows மூலம் Block செய்தல்

Step 1: முதலில் Control panel சென்று அதில் உள்ள Network மற்றும் Sharing center செல்ல வேண்டும்.
Step 2: இடது புறத்தில் உள்ள Adopter setting சென்று அதை இரண்டு முறை Click செய்து, அதில் உள்ள Active Network connection செல்ல வேண்டும்.
Step 3: பின்னர், Internet Protocol version 4 சென்று, அதில் உள்ள Properties-ஐ Click செய்ய வேண்டும்.
Step 4: பின்னர், ‘Use the Following Server Address' என்ற பகுதியை select செய்து, அதில் புதிய DNS IP server address-ஐ type செய்ய வேண்டும்.
Step 5: அதன் பின்பு, OK செய்து பின் Network Properties-ஐ மூடிவிடவும்.

DNS Configuration மூலம் IOS சாதனங்களில் ஆபாச தளங்களை தடை செய்தல்

Step 1: System Preference என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
Step 2: அதில் உள்ள Network என்பதை Click செய்ய வேண்டும்.
Step 3: பின்னர் அதில் உள்ள Active connection என்பதை Click செய்ய வேண்டும். அதில் புதிய DNS server address-ஐ பயன்படுத்த வேண்டும். மேலும் IP address-ஐ கமா செய்து பிரிக்க வேண்டும்.
Step 4: பின்னர் Apply Click செய்து, பின் Network setting-ஐ மூடிவிட வேண்டும்.

DNS Configuration மூலம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஆபாச தளங்களை தடை செய்தல்

Step 1: முதலில் Setting-ஐ Open செய்ய வேண்டும்.
Step 2: அதில் உள்ள Wifi-ஐ Turn on செய்ய வேண்டும்.
Step 3: தற்போதைய Connection-ஐ Hold செய்து பின்னர், அதில் உள்ள Modify Network Cofig என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
Step 4: Show advance option என்பதை Tape செய்ய வேண்டும்.
Step 5: பின்னர் அதில் உள்ள IP setting சென்று Static என்பதை Click செய்ய வேண்டும்.
Step 6: அதில் புதிய DNS server ஆன DNS 1 மற்றும் DNS 2 எண்களை Type செய்து பின்னர் Save செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, Wifi setting-ஐ மூடி விட வேண்டும்.
இந்த முறைகளின் மூலம் கணினி, ஆண்டராய்டு உள்ளிட்ட சாதனங்களில் ஆபாச தளங்களை Block செய்யலாம். இவற்றை செய்வதற்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/othertech/03/180303?ref=ls_d_tech

No comments:

Post a Comment