தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 ஜூன், 2018

கருட புராணப்படி நீங்கள் செய்த பாவத்திற்கு இது தான் தண்டணையாம்!

வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.
மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது.
இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது.
இப்புராணம், மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்டது.
பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பாவம் செய்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் பற்றி கருட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தண்டனைகளை பார்ப்போம்.
அவீசி

பொய்ச் சாட்சி சொல்லி நிரபராதிகளைத் துன்பத்துக்குள்ளாக்கும் மனிதர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படுமாம். இங்கு துர்நாற்றம் கொண்ட நீரில் ஆன்மாக்கள் அழுத்தப்பட்டுத் துன்புறுத்தப்படும்.
சாரமேயாதனம்
மக்களைக் கொன்று குவிக்கும், அப்பாவிகளின் உடைமைகளைப் பறித்துக்கொள்ளும் அநியாயக்காரர்களுக்கு இங்கு கொடிய மிருகங்கள் ஆன்மாக்களை வாட்டி வதைக்கும்.
லாலாபட்சம்
மனைவியைத் துன்புறுத்தி வதைக்கும் நபர்களுக்கு இங்கு ஆன்மாக்கள் தீக்கோலால் சுட்டுத் தண்டிக்கப்படும்.
விசஸனம்
பசுக்களை காரணமின்றி வதைப்பவர்களுக்கு இங்கு ஆன்மாக்கள் சவுக்கடியால் துன்புறும்.
பிராணிரோதம்

எந்தத் தொந்தரவும் செய்யாத மிருகங்களை வதைக்கும் நபர்களுக்கு இங்கு ஆன்மாக்கள் கூரிய அம்புகளால் குத்தப்பட்டு துன்பத்தை அனுபவிக்கும்.
பூபோதம்
ஒழுக்கக்குறைவாக பெரியோர்களை மதிக்காமல் மனம் போனபடி வாழும் இழி ஜன்மங்களுக்கு இங்கு விஷமுள்ள ஜந்துக்கள் இவர்களைத் துன்புறுத்தும்.
வைதரணி
தர்மமே செய்யாத லோபிகளுக்கு வைதரணி என்ற நதியில் கொடிய ஜந்துக்களும், பிசாசுகளும் வாழும். இங்கே பாவிகள் விழுந்து துன்பப்படுவார்கள்.
கிருமிபோஜனம்
கொஞ்சமும் அஞ்சாமல் பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் மனிதர்களுக்கு இங்கு புழு, பூச்சிகள், கிருமிகள் இவர்களைத் துளைத்துக் கொடுமைக்குள்ளாக்கும்.
வஜ்ரகண்டகம்
தறிகெட்ட காம இச்சையால் கொடுமைகள் செய்யும் நபர்களுக்கு நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைத் தழுவி துன்பப்பட வேண்டும்.
அக்னிகுண்டம்
பொய் சொல்லி, பிறரது உடைமைகளைக் கவரும் பாவிகளுக்கு இங்கு எரியும் அக்னிகுண்டத்தில் பாவிகள் வாட்டப்படுவார்கள்.
அந்தகூபம்
பிறரை ஏமாற்றி அளவுக்கு மீறி செல்வம் சேர்ப்பவர்களுக்கு இங்கு கொடிய மிருகங்கள் ஏறி மிதித்துப் பாவிகளை இம்சிக்கும்.
அசிபத்திரம்.
தர்ம நெறியைவிட்டு தெய்வ நிந்தனை செய்யும் பாவிகளுக்கு இங்கு பூதங்களால் பல கொடுமைகளுக்கு ஆளாவார்கள்.
காலகுத்திரம்
பெற்றோரை, பெரியோர்களை இம்சிக்கும் பிறவிகள் இங்கு அடி, உதை, பசி என்று ஆன்மாக்கள் தவிக்கும்.
உணவில் விஷம் வைப்பவர், மிருகங்களைக் கொன்று உண்பவர்களுக்கு இங்கு எண்ணெய்க் கொப்பரையில் ஆன்மாக்கள் வாட்டி எடுக்கப்படும்.
மகா ரௌரவம்
கருட பகவான்குடும்பத்தைக் கெடுப்பவர், உறவுகளைப் பிரிப்பவர்களுக்கு இங்கு கண்ணுக்குத் தெரியாத மாய வடிவங்கள் இம்சிக்கும்.
ரௌரவம்.
குழந்தைகளை, முதியவர்களை, நோயுற்றவர்களை, அபலைகளை இம்சிப்போருக்கும் இங்கு கிங்கரர்கள் சூலத்தால் குத்தி இம்சிப்பார்கள்.
அநித்தாமிஸ்ரம்
தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஏமாற்றி வாழ்வது, கொலை செய்வது எல்லாம் கொடிய செயல் இவர்களுக்கு இங்கு கொடிய இருளில் சிக்கி பயந்தே கிடப்பார்கள்.
தாமிஸிரம்.
நம்பியவர்களை ஏமாற்றுபவர்கள், செய்நன்றி மறப்பவர்கள், பிறர் மனைவியைக் கவர்பவர்களுக்கும் இங்கு கிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளால் அடித்துத் தண்டிப்பார்கள்.

http://news.lankasri.com/spiritual/03/180122?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக