தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 3, 2018

பார்ப்பவர்களை பயமுறுத்தும் தோற்றம், நடுங்க வைக்கும் சடங்குகள்: யார் இந்த அகோரிகள்

அதி பயங்கரமான சடங்குகளுக்கு பெயர் பெற்ற அகோரிகள் பற்றி அறிந்து கொள்ள நிறைய பேர் ஆவலாக இருப்பார்கள். அகோரிகள் என்கிற பெயரை கேட்டாலே நம்மில் பலருக்கும் பலவகையான கருத்துக்கள் உண்டு.
உண்மையில் அகோரிகள் யார்?
கோரம் என்னும் சொல்லுக்கு எதிர்பதம் அகோரம். கோரம் என்றால் பயங்கரம் என்றொரு அர்த்தம் உண்டு. அதற்கு எதிர்மாறான சாது தன்மை கொண்டவர்கள் அகோரிகள்.

உலகில் எதுவுமே அசுத்தமானது இல்லை என்று நம்புபவர்கள் அகோரிகள். சிவபெருமானிடம் இருந்து வந்த அனைத்தும் அவரையே சென்றடைகிறது. ஆகவே உலகில் எதுவுமே அசுத்தமானது இல்லை என்பது இவர்கள் நம்பிக்கை.

அகோரிகள் என்பவர்கள் பெரும்பாலும் நிர்வாணமாக ஆடையின்றி இருப்பார்கள். தலையில் நீண்ட முடியுடன் இருப்பார்கள். எப்போதும் இறுக்கமான முகத்துடன் காணப்படும் இவர்கள் துறவிகள் போல தனியான வாழ்க்கை வாழ்பவர்கள் கிடையாது.
சிறு சிறு குழுக்களாகவோ அல்லது தலைமை யோகியின் பின்னாலோ இவர்கள் இருப்பார்கள். இவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை அமானுஷ்யங்களை வெளியே விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

தங்கள் உடல் முழுவதும் சாம்பல் மற்றும் மண் அல்லது திருநீறு பூசியிருப்பார்கள். மதப் பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.
குழுக்களாக இருக்கும் அகோரிகளின் யார் தலைமை யோகி அல்லது யார் சீடர் என்று கண்டறிவது மிகுந்த சிரமமான காரியம். அனைவரும் ஒன்று போல தெரிவார்கள்.
அகோரிகளில் ஆண் மற்றும் பெண் யோகி ஆகிய இருபாலினருமே இருப்பார்கள். நிர்வாணமாகவே இருந்தாலும் இவர்களில் பெண் யோகிகளை கண்டறிவது கடினம்

இவர்களது உடல் யோகியின் உடல் போல சீரானதாக காட்சியளிக்கும். இவர்கள் ரிஷிகேஷ் மற்றும் இமயமலை வனங்களில் இருப்பார்கள்.
இவர்கள் அனைவரும் 12 வருடத்திற்கு ஒருமுறை கும்ப மேளாவில் கூடுவார்கள். இமாலய வனங்களில் இருந்து நடந்தே அலகாபாத் வந்தடைவார்கள். மீண்டும் நடந்தே சென்று விடுவார்கள்.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது வரிசையாக ஒரு ஒழுங்கோடு செல்வார்கள். வரிசையின் முன்னாலும் பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

நீண்ட ஜடா முடியும் மண் அல்லது சாம்பல் பூசியிருக்கும் இவர்கள் உடலில் இருந்து எந்த ஒரு வாசனையும் வராது. நறுமணமும் இருக்காது நாற்றமும் இருக்காது.
முக்கியமாக இவர்கள் பிறரோடு பேச மாட்டார்கள். தங்களுக்குள் பேசிக்கொள்வதை தவிர்ப்பார்கள். இவர்கள் ஒரு குழுவாக வட்ட வடிவில் அமர்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இந்த மூலிகையின் பெயர் மரியுவானா எனவும் கும்பமேளா சமயங்களில் மரியுவானா எல்லா இடத்திலும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

தங்கள் இருக்கும் இடத்திலிருந்த மூலிகைகளை கொண்டு வந்து வட்டமாக உட்கார்ந்து அதன் நடுவில் இந்த மூலிகையை வைப்பார்கள். பிரார்த்தனை செய்தபிறகே அனைவரும் புகைக்க தொடங்குவார்கள்.
ரிஷிகேசத்திலும் கும்ப மேளாவிலும் ஒரு டிகிரி சென்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உட்கார்ந்து த்யானம் செய்வார்கள். இப்படிப்பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.

இமயமலை பகுதிகளில் கங்கோத்ரி யமுனோத்ரி மற்றும் நேபாளம் இவர்களின் முக்கிய இடங்களாக இருந்து வருகிறது. கும்ப மேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வருவதில்லை.
குழுவிலிருந்து தனியே சில செயல்களுக்காக வெளியே செல்லும் இவர்கள் தங்குமிடம் மயானம். தங்கள் உடலின் சக்திநிலை அகோரிகளுக்கு மிக முக்கியம். யோக சக்தியின் உயர் நிலையை எதன்பொருட்டும் இவர்கள் இழக்க விரும்ப மாட்டார்கள்.

இயற்கையில் இருந்து சக்தி பெறுவது இவர்களுக்கு கை வந்த கலை. மயானம் ஆறு மற்றும் வனங்களில் இருந்து தங்களின் உடலை சக்தியை மேம்படுத்துவார்கள். தங்கள் யோக சக்தியை பிறருக்கு அனாவசியமாக காட்ட மாட்டார்கள்.

சமுகத்தில் தர்மம் தடுமாறும் சமயங்களில் சூட்சுமமாக செயல்பட்டு தர்மத்தை நிலை நிறுத்துவார்கள்.
அகோரிகளுக்கான கும்பமேளா என்பது சிறப்பு வாய்ந்த விழாவாகும். பூமியில் எந்த ஒரு விழாவையும் விட அதிக மக்கள் கூடும் விழாவாக கும்ப மேளா இருந்து வருகிறது.

2007ல் நடந்த கும்ப மேளாவில் ஒரு கோடி அகோரிகளுக்கும் மேல் கலந்து கொண்டனர். இதில் வியப்பான விடயம் என்னவென்றால் இந்த விழாவை ஒருங்கிணைக்க யாரும் கிடையாது, அழைப்பிதழ் வைத்து அழைப்பதும் கிடையாது. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத அகோரிகள் மிக சரியாக கும்ப மேளா அன்று ஒன்று கூடுவது ஆச்சர்யமான செயல்தான் அல்லவா. கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு சக்தி இவர்களை வழி நடத்துகிறது என்பது நம்பிக்கை.

பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ தண்ணீருக்கோ பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. உயிர் சேதமும் ஏற்பட்டதில்லை. யாரோ ஒருவர் கம்பளிகளோடு லாரியில் வந்து அவற்றை தானம் செய்கிறார். மற்றொருவர் அனைவருக்கும் உணவு விநியோகம் செய்கிறார். இப்படித்தான் ஏதோ ஒரு சக்திமூலம் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

அகோரிகள் தங்கள் குழுக்களில் பிறரை அவ்வளவு சுலபமாக சேர்க்க மாட்டார்கள். அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைமை பொறுப்பு ஏற்கும் சடங்குகள் விசித்திரமானது.
புதிய தலைவரை வணங்கி விட்டு பழைய தலைவர் தன்னை மாய்த்து கொள்வார்.
-தொடரும்.

http://news.lankasri.com/spiritual/03/180250?ref=ls_d_others

No comments:

Post a Comment