தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 ஏப்ரல், 2019

வயிற்றுப் புண் உங்களை வாட்டி வதைக்கின்றதா? இதோ அற்புத இயற்கை மருத்துவம்


அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் ஒன்று.
இன்றைய காலத்தில் பலர் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், அல்சரால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும்.
அதிக ஆசிட் வயிற்றில் சுரப்பது வயிற்றின் பல படிவுகளை அழித்து விடும். புண் தோன்ற இது காரணமாக இருக்கும் ஹெச் பைலோரி என்ற கிருமி பாதிப்பினால் புண் ஏற்படலாம்.
உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம்.
மேல் வயிற்று வலி, நெஞ்செரிச்சல், இரவில் வலி, உப்பிசம், அஜீரணம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி அதிக காற்றுப்போக்கு சோர்வு போன்ற அறிகுறிகளாகும்.
இந்த பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே வயிற்றுப் புண்ணை விரட்டலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • மாங்கொட்டைப் பருப்பை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். காலையும் மாலையும் ஒரு சிட்டிகை மாங்கொட்டை பொடியை எடுத்துக் கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.
  • மாதுளை பழத்தோலை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை மாதுளைப் பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் ஆறும்.
  • வாரம் இருமுறை இலவங்கப் பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் மூலம் உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.
  • பாகற்காயின் விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
  • கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் ஆறும்.
  • மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் ஆறும்.
  • மிளகைப் போடி செய்து சலித்துக் கொள்ள வேண்டும். இதில் அரை ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இதன் மூலம் அல்சரை குணப் படுத்தலாம்.
  • அகத்திக் கீரையை வேக வைத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.
  • ஆலமரத்திலிருந்து பால் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
  • வால்மிளகைப் போடி செய்து பாலுடன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும்.
  • சுக்குத் தூளை சிறிது எடுத்துக் கொண்டு அதை கரும்புச் சாருடன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும்.
  • வயிற்றுப்புண் ஆற பீட்ருட் கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக