பிரான்சில்TEL 0651257134
உங்களுக்கு மேலதிக விபரம் தேவை எனில் ஐரோப்பிய நேரம் 11 மணியில் இருந்து சர்வதேச தமிழ் வானொலியில் இணைந்து கேட்கலாம்
பிரான்சில்
ஆண்டுகளாக வதிவிட உரிமைப் பத்திரம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்கையை முன்னகர்த்திச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர்.
இதனால் பலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில், இன்னொருவருடைய வதிவிட உரிமைப் பத்திரத்தில் களவாக வேலை செய்து வருகின்றனர். இனி, நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
ஒத்துழைப்பு சான்றிதழ் (Attestation de Concordance) என்பதை விளங்கிக் கொள்வதனூடாக பல வருடங்களாக
இன்னொருவருடைய வதிவிட உரிமைப் பத்திரத்தில் வேலை செய்து வந்தவர்கள்
தங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த முடிகிறது.
விசா இன்மையால் வேலையிடத்தில் தங்களுடைய உண்மையான தகவல்கள் அடங்கிய பதிவொன்றை ஏற்படுத்த முடியாமல் அவதியுறுவோர், உங்கள் வேலை நிறுவனத்தால் ‚Attestation de Concordance‘ கிடைக்கும் பட்சத்தில் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் தங்களுடைய வதிவிட அனுமதிப்பத்திரத்தைக் கோருவதற்கான வழி வகைகளை தாராளமாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
✔️ நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.
-பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கை கடவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
-கீழேயுள்ள படிவத்தை Download செய்து, ஆரம்பத்தில் உங்களது தகவல்களையும், ‚Cette Embauche s’est Effectuée l’identité‘ எனுமிடத்தில் நீங்கள் யாருடைய வதிவிட பத்திரத்தில் வேலை செய்கிறீர்கள் என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.
-நீங்கள் வேலை செய்யும் நிறுவன உரிமையாளரிடம் இதனை விளங்கி, அதாவது வெளிநாட்டினரின் நுழைவு-குடியமர்வு மற்றும் புகலிட உரிமைச் சட்ட விதி ‚L 313-14‘ இன் கீழ் இது ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தி சம்மதம் வாங்கிக் கொள்ளுங்கள். (En application de l’article L. 313-14 du code de l’entrée et du séjour des étrangers et du droit d’asile)
-நீங்கள் வேலை செய்வதற்காக வதிவிட உரிமைப் பத்திரம் கொடுத்த நபரிடமும் இது சம்பந்தமான விளக்கங்களைத் தயக்கமின்றித் தெரியப்படுத்துங்கள்.
-படிவத்தின் இறுதியில், கையெழுத்திட்டவர் வழங்கிய தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை உங்கள் வேலை நிறுவனம் உறுதிப்படுத்தித் தரும் (Les informations transmises par les signataires sont certifiées authentiques).
-அந் நிறுவனத்தின் கீழ் நீங்கள் தொடர்ந்து வேலை செய்யுங்கள். உங்களிடம் குறைந்தது 6-8 மாத சம்பளப்பத்திரம் இருந்தால், நீங்கள் உடனடியாகவே வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
-உங்களுக்கு ஒரு வருட வதிவிட உரிமை வழங்கப்படும்.
இத் தகவலை
உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக