ஒரு வீட்டிற்கு குடியேறும் முன்போ அல்லது வீட்டை வாங்கும் முன்போ, அந்த வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்பதைப் பார்த்தே வாங்குவது அவசியமானதாகும்.
பொதுவாக தெற்கு பக்க வீட்டிற்கு செல்ல பயப்பட முக்கிய காரணமாக அந்த திசை எமதர்மனுக்கு உரிய திசையாகும்.
இந்த ஒரு காரணத்தினால் தான் தெற்கு திசை வீட்டைப் பலரும் புனிதமில்லாததாக கருதுகிறார்கள். உண்மையில் தெற்கு பார்தத வீடு நல்லதா? கெட்டதா? என்று பார்ப்போம்.
- வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெற்கு பார்த்த வீட்டில் சமையலறையானது தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் வடமேற்கு திசையிலாவது அமைந்திருக்க வேண்டும். இதனால் அந்த வீடு சிறப்பாகவும் புனிதமாகவும் இருக்கும்.
- தெற்கு திசை பார்த்த வீட்டில் இருக்கும் படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருப்பது நல்லது. இந்த திசையில் படுக்கும் அறை அமைந்திருந்தால் தான், அதீத நன்மையைப் பெற முடியும். முக்கியமாக இப்படி அமைந்தால், மன அமைதி அதிகரிக்கும்.
- தெற்கு பக்க வீடு இன்னும் சிறப்பாக இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு பக்க சுவர், வடக்கு பக்க சுவரை விட உயரமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். இதனால் தெற்கு பக்க வீட்டின் உண்மையான பலனைப் பெறலாம்.
- தெற்கு பக்க வீட்டில் கார் செட், தோட்டம், செப்டிக் டேன்க் போன்றவை, அந்த வீட்டில் தென்மேற்கு திசையில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக வீட்டின் தெற்கு பகுதியை விட வடக்குப் பகுதி காலியாக இருக்க வேண்டும்.
- தெற்கு வாசல் கொண்ட வீட்டில் கிணறு எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? கட்டாயம் கிணறு, குளம் போன்றவற்றை வீட்டின் தெற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.
- தெற்கு பக்க வாசல் கொண்ட வீட்டில், மரங்களை வடகிழக்கு பகுதியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் மாடி படிக்கட்டுகளை வடகிழக்கு பகுதியில் அமைக்கக்கூடாது. எனவே இதில் மிகவும் கவனமாக இருங்கள்.
- தெற்கு பார்த்த வீடு அனைத்து ராசிக்காரருக்கும் நல்லதல்ல. இம்மாதிரியான வீடு ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்ம ராசிக்கார்களுக்கு மிகவும் யோகம் நிறைந்த வீடாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த திசை நோக்கிய வீட்டை வாங்கலாம் அல்லது குடிப்புகலாம்.
- தெற்கு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள், மேற்கு வாசல் வீட்டில் குடியிருப்பவர்களிடம் சம்பந்தம் செய்து கொள்ளக்கூடாது. ஏனெனில் தெற்கும், மேற்கும் ஆகாது. இதனால் வீண் சண்டைகள், விவாதங்கள் தான் வரும். மேலும் இந்த மாதிரியான வீடு ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிகவும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக