தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 18, 2019

கூட்டு எண் 7 (16, 25 ) இவர்கள் யாரை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை ஜொலிக்கும்


7 ம் எண் நபர்கள் மிகவும் குறைவாக பேசுவார்கள். எப்போதும் ஒரு வித சிந்தனை மற்றும் கனவில் இருப்பார்கள். இதனால் இவரை ரொமான்ஸ் இல்லாதவர் என்று கணிக்க முடியாது.
7ம் எண் கேதுவைக் குறிக்கும். எண்கள் 2 ன் தன்மைகளில் பல இவர்களுடன் ஒத்துப் போகும் என்பதால் இவர்களுடன் இணையக் கூடிய ஒரு சிறந்த எண் 2. 7 ம் எண் நபர்கள் பொதுவாக கனவு உலகத்தில் வாழ்பவர்கள், அவர்கள் விரும்பும் வாழ்க்கையைப் பற்றி கனவு கண்டு கொண்டு இருப்பார்கள்.
இவர்கள் காட்சிபடுத்தும் கனவை கவரும் அளவிற்கு இவர்களின் மனம் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இவர்கள் மன அழுத்தத்தைத் தவிர்த்து மிகவும் ரிலாக்சாக இருக்க வேண்டும். 2 ம் எண் நபர்கள் போல், தனது துணையுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.
இவர்களின் துணையால் மோசமான முறையில் காயப்படும் வரை இவர்கள் இந்த பந்தத்தில் மிகுந்த விசுவாசமாகவும் நம்பிக்கையுடனும் இருப்பார்கள். 2ம் எண் நபர்கள் போல் இவர்களும் தொழில்முறை வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க, இவர்களின் சொந்த வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும்.
எதையும் அதிதீவிரமாக யோசிக்கும் காரணத்தால், எந்த ஒரு சின்ன பிரச்சனையும் இவர்களுக்கு பெரிதாக தோன்றும். தவறான புரிதலைத் தடுக்க இவர்கள் தங்கள் துணையுடன் அடிக்கடி மனம் விட்டு பேச வேண்டும்.

No comments:

Post a Comment