தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 4, 2019

வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கவே கூடாதாம்.. ஏன் தெரியுமா..?


நம் எல்லோர் வீட்டிலும் பூஜையறை இருக்கும். சிறிய வீடுகளில் கூட கடவுளின் படங்கள் வைத்து வழிபட சில இடங்களை ஒதுக்கி வைத்திருப்பார்கள்.
அங்கு நமக்குப் பிடித்த தெய்வங்களின் படங்கள், சிலைகள் ஆகியவற்றை வைத்திருப்போம். ஆனால் நாம் வீட்டில் வைக்கும் படங்கள் நம் வீட்டுக்கு நேர்மறையான சக்திகளை மட்டுமல்லாமல் எதிர்மறை சக்திகளையும் கூட உண்டாக்கும்.
அதனால் சில கடவுளின் படங்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. அப்போ எந்தெந்த கடவுளின் சிலைகளையும் படங்களையும் வைத்திருக்கலாம்?
  • ருத்ர வடிவிலான சிலைகள், படங்கள் வைக்கக்கூடாது. அது அச்ச உணர்வை அதிகரிப்பதோடு எதிர்மறை ஆற்றல்களும் வீட்டை சூழ்ந்திருக்கும்.
  • எதிரிகளை அழிப்பது போன்ற ஆக்ரோஷமான படங்களை வீட்டில் வைக்கக்கூடாது.
  • ராவணன், துர்க்கை போன்ற படங்களை வீட்டில் வைக்கக்கூடாது.
  • ஒரே மாதிரியான கடவுளின் படங்களை நிறைய வைக்கக் கூடாது. அதுபோல் இருந்தால் அவற்றை அருகருகிலோ அல்லது எதிரிலோ வைக்கக்கூடாது.
  • உடைந்த தெய்வ சிலைகள், கிழிந்த படங்களை வைத்திருக்கக்கூடாது. அது அபசகுணம் மட்டுமின்றி வீட்டுக்கு வருகிற செல்வத்துக்கும் தடையாக இருக்கும்.

No comments:

Post a Comment