தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 ஜனவரி, 2019

இது உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் போகாதாம்...!


நம் வாழ்க்கையில் எழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் உபதேசங்கள் மூலம் தீர்வை மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் கூறியுள்ளார். மகாபாரதத்தை முன்னின்று நடத்திய கிருஷ்ணர் பாண்டவர்கள் தளர்ந்திருந்த போதெல்லாம் தன்னுடைய விலைமதிப்பில்லாத அறிவுரையின் மூலம் அவர்களை பலம் பெற செய்தார். மகாபாரதம் என்றாலே அதில் கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்குமான உரையாடல்கள்தான் அதிமுக்கியதுவம் வாய்ந்தவை என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
அர்ஜுனன் தவிர்த்து ஏனைய பாண்டவர்களுடனான கிருஷ்ணரின் உரையாடல்களும் நம் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கூடியவைதான். அவரின் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொறுத்தக்கூடியவையாகும். அந்த வகையில் யுதிஷ்டிரனின் பதவியேற்பின் போது செல்வத்தை அடைவது எப்படி என்பது பற்றி கிருஷ்ணர் அவருக்கு வழிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அந்த வழிகள் நமக்கும் பயன்படக்கூடியவை. இந்த பதிவில் கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு கூறிய செல்வத்தை அடையக்கூடிய வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பாண்டவர்களின் வருகை
திரௌபதியை மணந்த பிறகு பாண்டவர்கள் தங்கள் தாய் குந்தியுடன் அஸ்தினாபுரத்திற்கு வந்தனர். நாட்டு மக்கள் அனைவரும் அவர்களை மிகவும் கோலாகலமாக வரவேற்றனர். அவர்கள் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி இல்லையென்றாலும் திருதராஷ்டிரனும், துரியோதனனும் போலி அன்புடன் அவர்களை வரவேற்றார்கள். நாட்டு மக்களின் வெறுப்பை சம்பாரிக்க விரும்பாத திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனுக்கு பட்டாபிஷேகம் செய்ய விருப்பமின்றி சம்மதித்தான்.
கிருஷ்ணரின் வருகை
யுதிஷ்டிரனின் பட்டாபிஷேகத்திற்கு குந்தியின் அழைப்பை ஏற்று கிருஷ்ணர் வந்திருந்தார். பட்டாபிஷேகம் முடிந்த பின் கிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் தனிமையில் பேசினார். அப்போது அஸ்தினாபுரத்தின் எதிர்காலம் பற்றி பேசிய போது கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு சில யோசனைகளை கூறினார். அதன்படி வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பது செல்வத்தையும், மகிழ்ச்சியையும் உங்கள் இல்லத்தை நோக்கி ஈர்க்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி இது நேர்மறை சக்திகளை ஈர்ப்பதுடன் உங்கள் ஆன்மாவையும் புனிதப்படுத்தும் என்று கூறினார்.

தண்ணீர்
இந்து மதத்தின் படி தேவைப்படுபவர்களுக்கு நீர் வழங்குவது கடவுளுக்கு சேவை செய்வதற்கு இணையானதாகும். அதனால்தான் எப்பொழுதும் சூரியபகவான் முதல் அனைத்து கடவுள்களுக்கும் நீர் முதலில் வழங்கப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு வரும் அனைவருக்கும் முதலில் நீர் கொடுத்து வரவேற்க வேண்டும். இது உங்கள் வீட்டில் செல்வம் குறைவில்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும்.

சந்தனம்
கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு ஒரு கதையை நியாபகப்படுத்தினார். அதன்படி ஆயிரக்கணக்கான பாம்புகளால் கடிக்கப்பட்டாலும் சந்தன மரம் ஒருபோதும் அதன் வாசனையை இழக்காது. அதேபோல எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வீட்டில் இருக்கும் சந்தனம் அனைத்தையும் விரட்டியடிக்கும். சாஸ்திரங்களின் படி சந்தனத்தை நெற்றியில் வைப்பது கடவுளின் அருளை உங்களை நோக்கி ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. இது செல்வத்தை ஈர்க்கும் காந்தமாக செயல்படும்.

நெய்
இந்து மதத்தில் மிகவும் புனிதமான மிருகமாக மதிக்கப்படுவது பசு ஆகும். அதன்படி பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் ஆனது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே பூஜையறையில் சுத்தமான பசும்பலினால் செய்யப்பட்ட நெய்யை கொண்டு விளக்கேற்றி கடவுளை வழிபடுவது கடவுளை மகிழ்விக்கும் முக்கியமான செயல்களில் ஒன்றாகும்.சுத்தமான பசும்பாலினால் செய்யப்பட்ட பாலாக இருக்கவேண்டியது அவசியம்.

வீணை
கிருஷ்ணர் கூறுகிறார் மண்ணிலிருந்து வளர்ந்த தாமரை மீது சரஸ்வதி தேவி எப்படி அமர்ந்திருக்கிறாரோ அதேபோல ஒருவர் வீட்டில் சரஸ்வதியின் சிலையோ அல்லது வீணையோ இருந்தால் அவர்கள் வீட்டில் வறுமையும், குழப்பங்களும் நிலையாக இருக்கும்.

தேன்
கிருஷ்ணரின் அறிவுரைப்படி தேன் என்னும் இயற்கை பொருளானது நமது ஆன்மாவை மட்டும் சுத்தப்படுவதவுவதில்லை, அது நமது இல்லத்தின் ஆராவையும் சுத்தப்படுத்தக்கூடும். தேனிற்கு அப்படிப்பட்ட ஒரு அற்புத சக்தி உள்ளது. இது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக