தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 செப்டம்பர், 2012

உங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ..?


உங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ..?

ஒரு முறை சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கம் வந்தார். அங்கே ஒருவர் தினமும் தவறான சுலோக உச்சரிப்பில் கீதை வாசித்து கொண்டிருப்பார். எல்லோரும் அவரை கேலி செய்வார்கள். சைதன்ய மகாபிரபு வருகிறார் என்று அறிந்த ஆலயபொறுப்பாளர்கள் அவரை ஒரு ஒதுக்கு புறமாக இருந்து கீதை வாசிக்க விட்டனர். அங்கே வந்த சைதன்யருக்கு யாரோ கீதையை தவறாக வாசிப்பது காதில் விழுந்தது. 

அவர் அருகில் சென்று கேட்
டார்.., "உங்களுக்கு சமஸ்கிருதம் நன்றாக தெரிவதாய் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ஏன் இப்படி தவறாக வாசிக்கிறீங்கள்..?" என்றார் சைதன்ய மகாபிரபு.

அதற்கு அவர் சொன்னார்.., "கீதையை திறந்ததும்.. தேரில் கிருஷ்ணரும் அர்ஜுனனும் நிக்கிறார்களே சுவாமி..! அதை காணும் போது என் உடல் நடுங்கிறது..! என் நா தழுதழுக்கிறது..! கண்ணீர் பெருகி ஒடுகிறது..! வார்த்தைகள் தவறுகிறது..! நான் என்ன செய்வேன் பிரவு..?" என கண்ணீர் விட்டார்.

திரும்பி மற்றவர்களை பார்த்து சைதன்ய மகாபிரபு கேட்டார்.. "உங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ..?" வெட்கி தலை குனிந்தனர் அவரை கேலி செய்தவர்கள்.

இங்கே இருக்கிறது பக்தி. பக்தி என்பது ஒரு கண்ணீவிடும் மிக உயர்த உண்ணதமான உணர்வு. அதில் ஆய்வுக்கோ விமர்சனத்துக்கோ இடமில்லை. இந்த சரணாகதியை அடைந்தவர்களை யாரும் வெல்லவோ.., தோற்கடிக்கவோ முடியாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக