தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 செப்டம்பர், 2012

சுபகாரியம் நடைபெறவுள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால் பரிகாரம் என்ன?


சுபகாரியம் நடைபெறவுள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால், முதலில் இறந்தவருக்கும், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கும் என்ன பந்தம் (இரத்த பந்தமா அல்லது நெருங்கிய சொந்தமா) என்பதைப் பார்க்க வேண்டும்.
இரத்த பந்தம், உடன்பிறப்பு வழியில் உள்ளவர் இறந்துவிட்டால், அடுத்த 30 நாட்களுக்கு எந்த சுப காரியமும் செய்யக் கூடாது. ஆனால், இரத்த பந்தத்திலேயே 70 வயதைக் கடந்தவர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் 3 நாட்களுக்குப் பின்னரும், அதிகபட்சம் 10 நாட்களுக்குப் பின்னரும் சுபகாரியம் செய்யலாம். அதில் தவறில்லை.
அதேபோல் விபத்து உள்ளிட்ட துர்மரணங்கள் ஏற்பட்டாலும் 30 நாட்களுக்குப் பின்னரே சுபகாரியங்களை செய்ய வேண்டும்.
சுபகாரியத்திற்கு தடையாக மரணம் நிகழ்ந்து விட்டதாக கருதுவதை முதலில் நிறுத்த வேண்டும். இதற்குக் காரணம், உயிரிழந்தவரின் கிரக அமைப்பு அந்தச் சூழலில் சிறப்பாக இருந்திருக்காது. அதற்காக சுபகாரியத்தை நிறுத்துவது சரியல்ல. சுப நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட குடும்பத்தில், ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் இதுபோன்ற அசம்பாவித சம்பங்கள் நிகழும்.
ஒரு சில ஜாதகருக்கு அசுபம் நடந்த பின்னரே சுப நிகழ்ச்சி நடக்கும். சில வீடுகளில் சுப நிகழ்ச்சி நடந்த ஓரிரு நாளில் அசுப நிகழ்வு ஏற்படும். இதற்கும் கிரக அமைப்புகளே காரணம். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் சனியும், குருவும் ஒன்றாக இருந்தால் அவருக்கு சுபமும், அசுபமும் அடுத்தடுத்து நடக்கும் என்பது விதி. எனவே, அவற்றை தடங்கலாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
சுபகாரியத்திற்கு முன்பாக அசுபம் நிகழும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் புண்ணிய நதிகளில் நீராடி உரிய பரிகாரங்களைச் செய்துவிட்டு, அதன் பின்னர் சுபகாரியத்தை மேற்கொள்வதில் எந்தத் தீங்கும் ஏற்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக