தானம் அளிப்பது மிகவும் சிறந்த விஷயமாக இருந்தாலும், தானமாக கொடுக்கும் சில பொருட்கள் தானம் கொடுப்பவர்களின் அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும். எனவே தானம் கொடுப்பதற்கு முன்பு எந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
- கிழிந்த துணிகளை தனமாக வழங்கினால் துரதிர்ஷ்டத்தை தான் உண்டாக்கும். எனவே உடைந்த பொருட்கள் மற்றும் கிழிந்த துணிகளை தானமாக வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
- துடைப்பத்தை தானமாக வழங்குவது என்பது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியை தானமாக வழங்குவதற்கு சமம். இது வீட்டில் பணப் பிரச்சனையைத் தான் வரவழைக்கும்.
- பிளாஸ்டிக் பொருட்களை தானமாக வழங்குவதும் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். குறிப்பாக இந்த பொருட்களை தானமாக வழங்கினால், அது ஒருவரது வளர்ச்சியில் தடையை உண்டாக்கும்.
- பழைய உணவுகளை தனமாக வழங்கினால் வருமானத்திற்கு அதிகமான செலவை சந்திக்க வைக்கும். எனவே பழைய உணவுகளை எப்போதும் தானமாக வழங்கக்கூடாது.
- கூர்மையான பொருட்களை தனமாக வழங்கினால் வீட்டில் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். எனவே கூர்மையான கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்ற பொருட்களையும் தானமாக வழங்கக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக