காலத்திற்கு காலம் பல தாக்குதல்களுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் முகம்கொடுத்து அழிவுகளை சந்திக்க நேர்ந்தாலும் இலங்கை என்பது என்றுமே ஒரு சுவர்க்க தீவுதான்.
இயற்கையின் அளவில்லா கொடைகள் கொட்டிக் கிடக்கும் இலங்கையில் வாழ்வதென்பதே வரம் என கூறியவர்களும் கூறுபவர்களும் கூட எம்மத்தியில் உண்டு.
அதையும் தாண்டி கால ஓட்டத்திற்கு ஏற்ப பல்வேறு சூழல்களால் இந்த நாட்டை விட்டு வேறு அயல் நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் பலர் மீண்டும் இலங்கையில் பழைய சந்தோசத்துடன் வாழ மாட்டோமா என ஏக்கத்துடனும் உள்ளனர்.
இந்நிலையில், பண்டைய இலங்கையினை நினைவுப்படுத்தும் வகையில் அக்காலத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ள நிலையில் பலருக்கு இது கடந்த கால நினைவுகளை மீட்டிப்பார்க்க உதவும் என நம்புகின்றோம்.
மேலும், தற்போது பல கல்வி கற்கும் மாணவர்களுக்கு நவீன காலம் தொடர்பான தெளிவு அதிகமாக இருக்கும் அதே சமயம் பண்டைய இலங்கையினை வெறும் புத்தகத்தில் எழுத்து வடிவிலும் வாய்வார்த்தையாகவும் கேட்டிருக்கின்றார்கள் பார்த்திருக்கின்றார்கள்.
அவர்கள் அனைவருக்கும் இது ஒரு பழைய இலங்கை தொடர்பான புது அனுபவமாக இருக்கலாம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக