தமிழ் நாட்டில், தமிழனின் பெருமைக்கு சான்றாக இருக்கும் ஆசியாவி லேயே மிக பலமான கோட்டை என்று புகழப்படும் செஞ்சிக் கோட்டையின் வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனையோ நூறு போர்களை சந்தித்து இன்றும் கம்பீரமாக இருக்கும் தமிழ் வீரத்தின் அடையாளம் இது.
தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டை யுடன் வலிமை யாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாசி(ஜி), "இது இந்தியாவி லுள்ள எவரும் உட்புக முடியாத கோட்டை களுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டை யாக இது இருந்தது.
பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்க ளால் பாதுசா(ஷா)பாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக் கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று. செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர்.
இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்க ளுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப் படுத்துகிறது.
செஞ்சிக் கோட்டை அமைப்பு செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளை யும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோ மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப் பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப் பட்டிருந்தது.
இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மகா(ஹா)ல், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக் கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண் டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக் கான அரணாக இயற்கை யாக அமைந்த கிருசு(ஷ்)ணகிரி, சக்கிலிதுர்க், ராச(ஜ)கிரி ஆகிய குன்றுகள் இருந்தன.
இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டு வரப் பட்டது.
செஞ்சிக்கு புகழ் வரக் காரணமாக இருந்தவர் ராசா (ஜா) தேசிங்கு , இவரைப் பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. மராத்தியர்கள் சிவாசி தலைமையின் கீழ் வீறுக் கொண்டு எழுந்து அவுரங்கசீப் பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராச்சி யத்தினை நிறுவ முயன்றார்கள் .
அப்பொழுது மரத்தாவி லிருந்து, கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். மராத்தியர் களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப்.
இதற்கிடையே சிவாசி மறைந்து விட அவரது மகன் ராசா(ஜா)ராம் தொடர்ந்து போரிட்டார் ஆனாலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப் பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமை யில் அனுப்பினார்.
முகமூத்கானின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல் பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லி விட்டார் அவுரங்கசீப்.
இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய சா(ஷா)ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு. சாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயல வில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராசா(ஜா) தேசிங்கும் சென்றான்.
தந்தையால் குதிரையை அடக்க இயல வில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப் பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரை யின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரை யையே பரிசளித்து விட்டார் சுல்தான்.
அது மட்டும் அல்ல இன்னொரு ராச(ஜ)புத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). செஞ்சி அருகில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாத சுவாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது.
அரங்கன் தான் தேசிங்கு ராசாவின் தெய்வம், எந்த வேலைச் செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லி விட்டு தான் செய்வாராம். தேசிங்கு ராசன் தன் செஞ்சிக் கோட்டை அரண்மனை யிலிருந்தே அந்தக் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத் தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச் சுரங்கம் உதவப்பட்டது.
எந்தப் போருக்குச் சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம். செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராசன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த சிறீஅரங்க நாதரிடம் அனுமதி கேட்ட போது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம்.
தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்து விட்டதே... முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்ட தாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.
போரில் தேசிங்கு, சுபாங்கி துரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கி யால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனை அறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம் பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராசனின் சமாதியும் படைத்தளபதி முகம்மது கானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக் குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.
https://www.manithan.com/history/04/211530?ref=ls_d_manithan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக