மெக்ஸிகோவில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மெக்ஸிகோ சீச்சென் இட்சாவில் உள்ள புராதன நகரான மாயன் நகருக்கு கீழ் உள்ள குகை ஒன்றிலேயே மேற்படி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சீச்சென் இட்சா மக்களின் தோற்றம், வாழ்க்கை முறை, நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடியும் என என்று மெக்ஸிக்கோ தொல்பொருள் ஆய்வாளர் கில்லர்மோ டே அன்டா கூறியுள்ளார்.
அங்குள்ள மக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னரே அந்தக் குகையைக் கண்டுபிடித்துள்ளனர். எனினும் அந்தக் குகைக்குச் சென்ற தொல்பொருள் ஆய்வாளர் ஒருவரால் காரணமின்றி மூடப்பட்டள்ளது.
கடந்த வாரம் மறுமொரு இடத்தை ஆராய சென்ற போதே தற்செயலாக கில்லர்மோ அந்தக் குகையைக் கண்டுபிடித்துள்ளார்.
குகையை ஆராய்ந்த போது அதிலிருந்து தொன்மையான ஊதுபத்தி கொளுத்தும் கலன்கயையும் கண்டுபிடித்தனர். அவை கி.பி 700ஆம் ஆண்டிலிருந்து கி.பி.1000 ஆண்டு வரை தொன்மையானவை என அந்நாட்டு செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குகையில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளத் திட்டமிடுவதாகத் கில்லர்மோ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக