தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 7, 2019

10,000 ஆண்டுகள் பழமையான கோவில்! எங்க இருக்கு தெரியுமா?

ஆதி தமிழனின் வழிபாட்டு தெய்வம் முருகன் மட்டுமே என்று பலர் செவி வழியாக செய்தி கூறினாலும், அதுதான் உண்மை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாகிய நம் இறைவனாக முருகன் இருந்ததும், குமரிக்கண்டம் இருந்த போது கட்டப்பட்ட கோயில் முருகன் கோயில் என்பதும் உங்களுக்கு தெரியுமா?
வாங்க அது பற்றி தெளிவாக காண்போம்!

மழை தெய்வம்
பண்டையத் தமிழர்கள் மழையை தெய்வமாக எண்ணி வழிபட்டதாக குறுந்தொகை, பரிபாடல் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. மழையின் கடவுள் இந்திரன் என்றும் செவிவழியாக அறிந்த செய்திகள் நம்மை நம்பச் செய்தன.

இந்திர விழா
தமிழர்கள் வாழ்ந்த குமரி கண்டம் முதல் பல்வேறு கண்டங்களிலும் மழைக்காக இந்திர விழா என்ற ஒரு கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.

உண்மையின் முருகன்
ஆனால் உண்மையில் தமிழ் கடவுள் முருகனாகத் தான் இருந்திருக்கவேண்டும் என்றும், அந்த காலத்திலேயே முருகனுக்கு கோயில் கட்ட வழிபட்டதாக தெரியவந்துள்ளது.

எங்கே தெரியுமா?
மாமல்லபுரத்திலிருந்து 5 கிமீ தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.

முதலாம் சங்ககாலம்
கிமு 3ம் நூற்றாண்டிலிருந்து கிபி 3ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

செங்கற் கட்டிடம்
இந்த கோயில் முழுவதும் சுடு செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. உண்மையில் இது என்ன ஆச்சர்யம் என்றால் அந்த காலத்தில் கற்களாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டுவந்த வேளையில் சுடுசெங்கற்கள் உபயோகம் மிகவும் அதிர்ச்சிக்குரியது. அந்த காலத்திலேயே தமிழர்கள் அறிவியல் முன்னோடியாக திகழ்ந்துள்ளனர் பாருங்கள்.

முருகன் கோயிலுக்கு சாட்சி
முருகன் கோயில் தான் இது என்பதற்கான சாட்சி, கல்லால் ஆன வேல். இது செங்கள் அடித்தளத்தின் மீது கம்பீரமாக நிற்கிறது.

வடக்கு நோக்கி
தற்காலத்தில் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு, அல்லது மேற்கு நோக்கி கட்டப்பட்டதை போலல்லாமல் வடக்கு நோக்கி இருக்கிறது இந்த கோயில்.

சிற்ப சாஸ்திரங்கள்
சிற்ப சாஸ்திரங்கள் என்பவை எழுதப்படுவதற்கு முன்னரே இந்த கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். நிச்சயமாக கிபி 7ம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

ஆழிப்பேரலை
ஏறத்தாழ 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக இந்த கோயில் அழிவுற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

கல்வெட்டுக்கள்
இந்த கோயில் இருக்கும் இடம் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆரம்ப கட்டத்தில் நிறைய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீரர் பிரியன் என்பவர் இந்த கோயிலுக்கு 10 பொன் நன்கொடை தந்திருப்பதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

ராஜராஜ சோழன்
முதலாம் ராஜராஜ சோழன் அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தகவல்களும் இந்தகல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

குறவைக் கூத்து
பகலெல்லாம் பணியாற்றிவிட்டு இரவு நேரங்களில் ஆண்களும் பெண்களும் இணைந்து பங்குபெறும் குறவைக்கூத்து நிகழ்ச்சிப் பற்றியும் கல்வெட்டுக்கள் இருக்கு.

சிவலிங்கம்
பச்சைக் கல்லினால் ஆன சிவலிங்கம் ஒன்றும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பழமையான கோயில்
இந்த கோயில்தான் உலகின் மிக மிகப் பழமையான கோயில் என்று உறுதியாக நம்பப்படுவதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment