தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, August 14, 2018

எண் 8 (17,26) இல் பிறந்தால் வாழ்க்கை இப்படியெல்லாம் இருக்கும்: யாரை திருமணம் செய்துகொள்ளலாம்


8 ஆம் எண்ணில் பிறக்கும்போதே, மனிதன் விதியில் வசப்படுகிறான், 8 ஆம் எண் பிறவி எண்ணாக வரும் போது.
வாழ்க்கையில் கடும் போராட்டத்தையும், உடலில் அல்லது மனத்தில் ஏதாவது சிறிய நோயையும் கொடுத்து விடுகிறத. ஆனால் விதி எண்ணாக வரும்போது, அவனது முயற்சிகளையும், ஊக்கத்தையும் தனது காலத்தில் (30 வயதுக்கு மேல்) கொடுத்து அவனைத் தடுமாற வைத்து விடுகிறது!
அவனது சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் அனைவரிடமும் கெட்ட பெயர் அல்லது அவமானம் அடைய நேரிடுகிறது! பின்பு அவனை தன்வழியே போராடும் குணத்தை 8 எண் வாரி வழங்குகிறது!
புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், புதிய ஊர் என்று ஒரு புதிய அற்புத வழியைத் திறந்து விடுகிறது! எனவே மக்களும், தங்களது கடுமையான உழைப்பால் வாழ்க்கையின் உச்சியை 45 வயதுக்கு மேல் எப்படியும் அடைந்து விடுகிறார்கள்.
இதுவே அனுபவ உண்மை ஆகும். பள்ளியில் தனது போதனையாலும் தேவைப்பட்டால் தண்டனையாலும் ஒரு மாணவனைச் சீர்திருத்தும் ஆசிரிய¬ப் போன்றவரே சனீசுவரராவார். எனவே 8ம் எண் விரும்பத் தக்கதேயன்றி வெறுக்கத்தக்கதன்று!
சில அன்பர்கள் கோடீசுவரர்கள் குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். இவர்கள் என்னதான் வசதி மிகுந்த நிலையில் வாழ்ந்திடினும், வண்டுகள் துளைத்த மாங்கனியைப் போல் உள்ளக் குடைச்சல்கள் நிறைந்தவர்கள்! மனத்தில் ஏதாவது ஒரு சோகத்தையும், வியாதியையும் வைத்துக் கொண்டு, மனதில் நிம்மதியில்லையே என்று அலைவார்கள். "பாசமாவது ஒன்றாவது. அது வீதயில்தான் கிடைக்கிறது" என்று புலம்புவார்கள்.
ஏதாவது ஒரு பெரிய குறை அல்லது குறைபாடு மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.
குழந்தையில்லை, மனைவியால் இன்பமில்லை. நண்பனால் சுகமில்லை என்று எதையாவது நினைத்துத் தங்களை வருத்திக் கொள்வார்கள்.
வாழ்க்கையினை வெறுத்து முதியோர் இல்லம், ஆன்மீக மடங்கள், அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் இருப்பவரும், அதனை ஆரம்பிப்பவரும் 8 ஆம் எண்காரர்களேயாகும்.
8 ம் எண்காரர்களும் அதிர்ஷ்டம் மிகுந்த வாழ்க்கை வாழ வேண்டுமெனில் தங்களது பெயரினை மிகவும் ஆராய்ந்து, நல்ல பெயர் ஒலியிலும், பெயர் எண்ணிலும் வைத்துக் கொண்டால், தங்களது கெட்ட விதியினைக்கூட மாற்றிவிட முடியும்! பல அன்பர்கள் பெயரை சீர்படுத்தி பலனடைந்துள்ளார்கள்.
தெய்வ நம்பிக்கை இவர்களிடம் தீவிரமாகவே உண்டு! ஒன்று கடவுளே இல்லை! என்று வாதிடுவார்கள். அல்லது கடவுளே கதி! என்று இறைவனை நம்புவார்கள்.
தங்கள் நல்லதென்று நினைத்து, எடுத்துச் செய்கின்ற காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப்படாமல் செய்து முடிக்கும் வலிமை இவர்களுக்கு உண்டு. ஓரளவு பிடிவாத குணம் நிறைந்தவர்கள்.
இவர்கள் மேற்பார்வைக்குக் கடின மனமும் பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சமூகத்தில் பாதிக்கப்பட்டோரைக் கண்டால், அவர்களை ஆதரித்து வாழ்க்கையளிக்கத் தயங்க மாட்டார்கள். பலாப்பழம் போன்ற குணமடையவர்கள்.
பொது சேவைக்கான முயற்சிகள், எடுத்துக் கொண்டிருப்£ர்கள். தங்களது வாழ்க்கையிலும், எப்போதும் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். தங்களின் வசதிகளையும், பதவிகளையும், உறவினர்களையும் திடீரென ஒருநாள் ஒதுக்கிவிட்டு, மக்கள் சேவைக்கென ஓடிச் செல்பவர்கள் இவர்கள்தான்.
தனிமனித வாழ்ககையானாலும், சமுதா வாழ்க்கையானாலும் எட்டாம் எண்ணின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டால், பெரிய சோதனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் என்றே எண்கணிதம் சொல்கிறது!
சாகதத்திலும், எந்த ஒரு கிரகமும் 8ம் இடத்தில்(இராசிக் சக்கரம்) இருந்தாலும் (சனியைத் தவிர) அல்து கோசாரத்தில் 8 ம் இடத்திற்கு வந்தாலும், அந்தச் சாதகர்கள், அந்தக் கிரகத்தின் காரணத்தால் பல துன்பங்களை நிச்சயம் அடைவார்கள் என்று சோதிட சாத்திரம் கூறுகிறது!
"எட்டாவது பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த இடமெல்லாம் குட்டிச் சுவர்" என்பது பழமொழி. மக்களும் 8, 17, 26 ஆகிய தேதிகளைக் கண்டுதான் பயப்படுகிறார்கள். எந்த ஒரு நற்காரியத்தையும் தவிர்த்து விடுகிறார்கள்.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், &ம் எண்ணை விதி எண்ணாக உடையவர்களும் 9&ம் எண்ணில் தங்களது பெயரை உடையவர்களும், தங்களது வாழ்வில் பல தோல்விகளையும், வேதனைகளையும், சில அவமானங்களையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதே 8&எண் கூறும் வாழ்க்கை நியதி!
தெய்வ நம்பிக்கை இவர்களிடம் தீவிரமாகவே உண்டு! ஒன்று கடவுளே இல்லை! என்று வாதிடுவார்கள். அல்லது கடவுளே கதி! என்று இறைவனை நம்புவார்கள்.
தங்கள் நல்லதென்று நினைத்து, எடுத்துச் செய்கின்ற காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப்படாமல் செய்து முடிக்கும் வலிமை இவர்களுக்கு உண்டு. ஓரளவு பிடிவாத குணம் நிறைந்தவர்கள். இவர்கள் மேற்பார்வைக்குக் கடின மனமும் பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சமூகத்தில் பாதிக்கப்பட்டோரைக் கண்டால், அவர்களை ஆதரித்து வாழ்க்கையளிக்கத் தயங்க மாட்டார்கள். பலாப்பழம் போன்ற குணமடையவர்கள்.
பொது சேவைக்கான முயற்சிகள், எடுத்துக் கொண்டிருப்பார்கள். தங்களது வாழ்க்கையிலும், எப்போதும் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். தங்களின் வசதிகளையும், பதவிகளையும், உறவினர்களையும் திடீரென ஒருநாள் ஒதுக்கிவிட்டு, மக்கள் சேவைக்கென ஓடிச் செல்பவர்கள் இவர்கள்தான்.
தனிமனித வாழ்ககையானாலும், சமுதா வாழ்க்கையானாலும் எட்டாம் எண்ணின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டால், பெரிய சோதனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் என்றே எண்கணிதம் சொல்கிறது!
சாகதத்திலும், எந்த ஒரு கிரகமும் 8ம் இடத்தில்(இராசிக் சக்கரம்) இருந்தாலும் (சனியைத் தவிர) அல்து கோசாரத்தில் 8&ம் இடத்திற்கு வந்தாலும், அந்தச் சாதகர்கள், அந்தக் கிரகத்தின் காரணத்தால் பல துன்பங்களை நிச்சயம் அடைவார்கள் என்று சோதிட சாத்திரம் கூறுகிறது!
இவர்களது தொழில்
இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான அனைத்து தொழில்களும் வெற்றி தரும். 8ம் எண் வலிமை பெற்றால் பொறியாளர்களாகவும், 8 ம் எண்ணின் வலிமை குறைந்தால் டிப்ளமோ மற்றும் லேத் தொழில்கள் போன்ற வேலைகளில் ஈடுபடும் சாதாரணத் தொழிலாளிகளாகவும் இருப்பார்கள்.
லாரி, பஸ் போன்ற (சனியின் காரகத்துவ) தொழில் இவர்களுக்குப் பெருத்த அதிர்ஷ்டத்தைத் தரும். மில்கள் எண்ணெய் மில்கள், இரும்பு வியாபாரம் ஆகியவையும் நன்மை தரும். எண்ணெய் வியாபாரமும் நல்லது.
ஆன்மீக மடாதிபதிகள், கோவில் தர்மகர்த்தா, ஊர்மணியகாரர் போன்றவர்ளாகவும் புகழ் பெறுவார்கள்.
மேலும் நிலம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்கு யோகத்தைத் தரும். விவசாயம், கட்டிங்கள் கட்டுதல், லே அவுட் போடுதல் இவர்களுக்கு ஒத்து வரும். பெரிய நிலக்கிழார்களும், பெரும் விவசாயிகளும் இவர்கள்தாம்.
கம்பளித் துணிகள், ஆயுதங்கள், சோப்புக்கள், வியாபாரம் மற்றும் உற்பத்தித் தொழில்கள் நல்ல இலாபத்தைத் தரும். இவர்கள் அச்சகம் (Press), சோதிடம், வைத்தியம் ஆகிய தொழில்களிலும் வெற்றியடையலாம். சிறைத் துறையும் (Jail Department) இவர்களுக்கு ஒத்துவரும்.
திருமண வாழ்க்கை
இவர்களது திருமண வாழ்வு பெருமையாகச் சொல்லப்படவில்லை! திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும். தங்களது மனைவியுடன் கூட திறந்த மனதுடன் பழக மாட்டார்கள். சிலர் தனது மனைவிகளை அலட்சியத்துடன் நடத்துவார்கள்.
மனைவி எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவார்கள். இதேபோல் 8 ம் தேதி பிறந்த மங்கையரும், தங்கள் கணவருடன் அன்பின்றியே நடந்து கொள்வார்கள். தன் மனம்போல் வாழ நினைப்பார்கள். இங்ஙனம் உண்மையான அன்பின்றியே பெரும்பலானா எட்டாம் எண் நபர்கள் வாழ்கின்றார்கள்.
இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம். 8 ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.
நண்பர்கள்
1, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களே இவர்களுக்குச் சிறந்த நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 8ம் தேதி பிறந்தவர்களாலும் இவர்கள் நன்மையடையலாம். 6, 5 தேதியில் பிறந்தவர்களாலும் நன்மை அடையலாம்!
இவர்களது நோய்கள்
இவர்கள் பிறந்த தேதிகள். குடல் பலகீனம் உடையவர்கள். சிறு வயதுகளில் வயிற்றுவலி பெரும்பாலோர்க்கு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு! தலைவலி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.
இரத்தத்தில் விஷச்சேர்க்கை எளிதில் ஏற்பட்டுவிடும். எனவே அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது! வாதம் மூட்டுப் பிடிப்புகளால் பாதிப்புகள் அதிகம் உண்டு. ஈரல் அடிக்கடி பாதிக்கப்படும்.
காபி, டீ, மது போன்றவற்றில் நிதானம் தேவை. உணவில் எலுமிச்சம் பழம், அன்னாசி, வாழை, சிஸ்மிஸ் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரை மிகவும் நல்லது!
சனி மந்திரம்
நீலாஞ்ஜந ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நவாமி சநைச்சரம்
8 ஆம் தேதி பிறந்தவர்கள்
இவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அமைதியான வாழ்க்கை உண்டு. மதப்பற்று அதிகம் உண்டு. இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள்.
சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்ல இயல்பினர். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள்.
17 ஆம் தேதி பிறந்தவர்கள்
இவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்திப்பவர்கள். சலிக்காமல் உழைக்கும் இயல்பினர். எப்படியும் இறுதியில் பெருமைமிகு வாழ்க்கையை அடைவார்கள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும் உண்டு. ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள்.
இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. பணம் சேர்ப்பதில் சமர்த்தர். துணிந்து எடுக்கும் சில முடிவுகள் தோல்வியும் அடையும்.
இருந்தாலும் அதை வெளியே தெரியாமல் வெற்றிக்கு மாற்றும் சாதுர்யம் உண்டு. இவர்களே பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள். தங்களுக்கு வரும் தடைகளையும், சோதனைகளையும் துவம்சம் செய்யும் துணிவு படைத்தவர்கள்.
26 ஆம் தேதி பிறந்தவர்கள்
பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும் அதிகம் உண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள்.
எப்படியும் உயர்ந்த பதவி/ தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் இவர்கள்தான். பிறரால் அடிக்கடி வீண்பழி சுமத்தப்படுவார்கள். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள்.
இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்து விடும். இவர்கள் மக்கள் அனைவரையும் எந்த வித்தியாசமின்றிச் சமமாக நேசிப்பார்கள் காதல் விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்படும்.

http://news.lankasri.com/lifestyle/03/185642?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment