தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, August 28, 2018

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த குழந்தை: ஆய்வாளர்களுக்கு கிடைத்த ஆதாரம்

ரஷ்யாவில் உள்ள குகை ஒன்றில் இருந்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
நீண்ட காலத்திற்கு முன்னர், ரஷ்யாவின் குகை ஒன்றில் இருவேறு இனங்கள் ஜோடி சேர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஆதாரங்களில் இருந்து அந்த ஜோடிக்கு ஒரு மகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகளின் மரபணுக்களில் இருந்து அந்த பெண் குழந்தையின் தாய் நியாண்டெர்தல் (Neanderthal) என்றும், தந்தை டெனிசோவன் (Denisovan) இனத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் என்ற இனங்கள், மனித இனம் என்றாலும் வேறு உயிரின வகையை சேர்ந்தது. இந்த இனங்கள் தற்போது அழிந்துவிட்டன.
கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் நியாண்டெர்தல் இனம் பரவியதாக நம்பப்படுகிறது.
இந்த இரண்டு உயிரினங்களும் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர்; நியாண்டெர்தல் மேற்கிலும், டெனிசோவன் கிழக்கிலும் வசித்தனர்.
நியாண்டெர்தல் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியபோது, டெனிசோவனுடனும், தற்போதைய மனிதர்களின் ஆரம்பக்கால மூதாதையர்களுடனும் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, நியாண்டெர்தல் உயிரினங்கள், தங்கள் பிரத்யேக அடையாளத்தை இழப்பதற்கு முன்னர் மேற்கில் இருந்து கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவை நோக்கி முன்னேறியதை இந்த ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

http://news.lankasri.com/othercountries/03/186679?ref=ls_d_world

No comments:

Post a Comment