சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 18ஆம் நூற்றாண்டு கால சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முனிசிபல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது தற்செயலாக இந்த சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்துள்ளனர்.
அது 30 மீற்றர் நீளமுடைய ஒரு சுரங்கப்பாதையாகும்.
செங்கலால் ஆன அந்த சுரங்கப்பாதை, 1718க்கும் 1730க்கும் இடையில் ஜெனீவாவில் கட்டப்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் ஜெனீவாவில் எட்டு கிலோமீற்றர் தொலைவுக்கு பூமிக்கடியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
எதிரிகள் தாக்கினால்கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அளவுக்கு அது அமைக்கப்படிருக்கிறது.
சுவிஸ் படையினர், பாதுகாப்பாக பூமிக்கடியிலேயே சுற்றும் அளவு அந்த சுரங்கப்பாதை பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.
அந்த காலகட்ட சுரங்கப்பாதைகள் பல, பின்னர் ஜெனீவாவை நகரமாக்கும் நடவடிக்கைகளின்போது 19ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டுள்ளன.
தற்போது, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த சுரங்கப்பாதையை எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க ஜெனீவா நகரம் விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக