தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஜூலை, 2019

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!பிறர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின் படி என்ன நடக்கும் தெரியுமா?



கருட புராணம் என்பது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும், கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.
மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது.
இது மட்டுமின்றி, இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்பு குணங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தாமிஸிர நரகம்
குற்றம்
  • பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரிக்க நினைத்தால், பிறரது பொருளை அபகரித்தல்.
தண்டனை
  • முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாலும் (பீமனின் கதைப் போன்று) அடிப்பார்கள்
அநித்தாமிஸ்ர நரகம்
குற்றம்
  • கணவனும், மனைவியும் சேர்ந்து வாழாமல், ஒருவரை இருவர் ஏமாற்றுதல். கணவன், மனைவியை வஞ்சிப்பது, மனைவி, கணவனை வஞ்சிப்பது.
தண்டனை
  • கண்கள் செயல் இழந்து, இருள் சூழ்ந்த இடத்தில தவிக்கவிடப்படுவர்கள்.
ரௌரவ நரகம்
குற்றம்
  • பிறருடைய குடும்பத்திற்கு கேடு விளைத்தல், அளிப்பது, அவர்களது பொருள்களை பறித்தல்.
தண்டனை
  • சூலாயுதம் கொண்டு குத்தி துன்புறுத்துதல்.
மகா ரௌரவ நரகம்
குற்றம்
  • மிகவும் கொடூரமாக பிறரது குடும்பங்களை வதைத்தல், பிரிப்பது, கேடு வேலைகளில் ஈடுபடுவது.
தண்டனை
  • "குரு" என்ற கோரமான எம மிருகங்கள் பாவிகளை சூழ்ந்து, முட்டி மோதி பல வகைகளில் ரணகளப்படுத்தி துன்புறுத்துவது.
கும்பிபாகம்
குற்றம்
  • சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும், கொன்றும் பல விதங்களில் கொடுமை செய்தல்.
தண்டனை
  • எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கொப்பறையில் போடு வதைப்பது.
காலகுத்திரம்
குற்றம்
  • பெரியோர்களை, பெற்றோர்களை, அடித்து அவமதித்தல், பட்டினி போடுதல்
தண்டனை
  • அதே முறையில், அடி, உதை, பட்டினி என்று வதைக்கபப்டுவார்கள்.
அசிபத்திரம்
குற்றம்
  • தர்ம நெறிகளை மீறுதல், அதர்ம வழியில் சென்று பாவங்கள் செய்தல்
தண்டனை
  • பூதங்களால் துன்புறுத்தப்பட்டு, இனம் புரியாத ஓர் பயத்துடன் அவதிப்பட வைப்பது.
அந்தகூபம்
குற்றம்
  • உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல்
தண்டனை
  • கொடிய மிருகங்கள் கடித்து குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.
அக்னிகுண்டம்
குற்றம்
  • பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும், செல்வாக்காலும் அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.
தண்டனை
  • பாவிகள், ஓர் நீண்ட தடியில் மிருகத்தைப் போல கைகால்கள் கட்டபப்ட்ட நிலையில் எரியும் அக்னிகுன்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
வஜ்ரகண்டகம்
குற்றம்
  • சேரக்கூடாத ஆணையோ, பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடைதல்.
தண்டனை
  • நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளை கட்டித்தழுவ பாவிகள் நிர்பந்திக்கப்படுவார்கள்.
கிருமிபோஜனம்
குற்றம்
  • தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப் பிழைத்தல்
தண்டனை
  • பிறவற்றை துளைத்து செல்லும் இயல்பினை கொண்ட கிருமிகள் மூலமாக பாவிகள், கடித்து துளையிட்டு துன்புறுத்தப்படுவார்கள்.
சான்மலி
குற்றம்
  • நன்மை, தீமை, பாவம் ஆகியவற்றைப் பாராமல், உறவு முறையைக் கூடப் பாராமல் யாருடனாவது, எப்படியாவது கூடி மகிழ்தல்.
தண்டனை
  • முள்ளால் ஆன தடிகளாலும், முட்செடிகளாலும் எம அரக்கர்கள் துன்புறுத்துவார்கள்.
வைதரணி
குற்றம்
  • நல்வழிகளில் செல்லாமல் தர்மத்திற்குப் புறம்பாக நடத்தல்.
தண்டனை
  • வைதரணி என்ற இரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகளை விழவைத்து துன்புறுத்துவர்.
பூபோதம்
குற்றம்
  • சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடுதல், ஒழுக்கக்குறைவாக நடத்தல், எந்த இலட்சியமும் இன்றி வாழ்தல்.
தண்டனை
  • விஷமுடைய போசிகள், பிராணிகள் கொண்டு கடிக்க வைத்தல்.
பிராணி ரோதம்
குற்றம்
  • பிராணிகளைக் கொடுமைப்படுத்துதல்
தண்டனை
  • கூர்மையான பாணங்களை (அம்புகள்) பாவிகள் மீது எய்து துன்புறுத்துவது.
விசஸனம் குற்றம்
  • பசுக்களைக் கொடுமை செய்தல்.
தண்டனை
  • எம அரக்கர்களால், சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துதல்.
லாலா பக்ஷம்
  • குற்றம்
மனைவியைக் கொடுமைப்படுத்தி, முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல்.
  • தண்டனை
  • பாவிகளும் அதே முறையில் வதைக்கப்படுவர்கள்.
சாரமேயாதனம்
குற்றம்
  • வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுக் குவித்தல்.
தண்டனை
  • விசித்திரமானக் கொடிய மிருகங்களால் பாவிகள் வதைக்கப்படுவார்கள்.
அவிசீ குற்றம்
  • பொய்சாட்சி சொல்லுதல்
தண்டனை
  • நீர்நிலைகளில், பாவிகளை தூக்கி வீசப்பட்டு, நீரில் முக்கிக் கொள்ளுதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக