இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் பலர் சிறுவயதிலே அவஸ்த்தைப்படுவதுண்டு.
இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் உண்டு. இதில் சிலருக்கு பரம்பரையாக வருவது. மேலும் சிலர் செயற்கை நிறங்களை கலரிங் செய்வது என்பது முக்கிய காரணமாகும்.
வெள்ளை முடி பல நேரங்களில் நமக்கு எரிச்சலையும், நம் அழகைக் கெடுக்கும் வகையிலும் இருக்கும். இதற்கு எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை ஒரு நல்ல எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொடுக்கும். இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- தேங்காய் எண்ணெய்
- எலுமிச்சை சாறு
பயன்படுத்தும் முறை
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின் அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இப்படி ஒருவர் தினந்தோறும் செய்து வந்தால், நிச்சயம் வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.
https://news.lankasri.com/beauty/03/195117?ref=ls_d_special
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக