தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, December 29, 2018

ஒற்றை சொல் தரும் பொருள்கள் "வே"

வே..... சிறப்பு அறிவோம்..

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து /தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும். 

தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.

மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான். 

சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.

சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.

'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.

நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது. 

வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.

கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது

உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்

கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கண உயிர்ப்புடன் இருக்கும் மொழி... ப்ரியமான...
நமது தாய்மொழி மட்டும் தானே...
படம்:சூரி(ஶ்ரீ கௌரி ஆர்ட்ஸ்)
படத்தில் மறைந்து உள்ளவற்றையும் அறிய முயற்சிப்போம்..
#ப்யாரீப்ரியன்...
புலனப்பகிர்விலிருந்து...
 — with Sri Gowri Arts.

No comments:

Post a Comment