தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

நீங்கள் தமிழரா!? பிற மதத்தவரே முண்டியடிக்கும் எமது சொத்தை ஒருமுறை சென்று பாருங்கள்!

 


கட்டாயம் போங்கள் !

ஒரு முறை சென்று பாருங்கள், அழகிய இயற்கை வனப்புடன் அமைந்திருக்கும் வெடுக்குநாறி மலையை!

வன்னி மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்திருக்கும் அழகிய மலையுடன் சேர்ந்த தமிழர் வரலாற்று பாரம்பரியம் மிக்க பழைய கோயில்.

எங்கள் தமிழர் பிரதேசத்தில் வெடுக்குநாறி மலை என்று ஒன்றுள்ளது என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது.

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புக்களை கொண்டு காணப்படுகின்றது.

300m உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டிக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றை காணமுடியும்.

மலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 5 தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை அடுத்து இத்தடையினை நெடுங்கேணி காவல் துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள தற்போது அனுமதித்திருந்தார்கள்.

அங்கு, பிராமிய கலவெட்டுக்கள், வட்டெழுத்துக்கள், மர்மக்கேணி, இராஜ நாக குகை, மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆகியவற்றை பார்க்கமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக