உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியங்கள் உங்களுடைய பிறந்த எண்ணில் இருக்கிறது.
பிறந்த திகதியை வைத்து உங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.
இவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவதுதான். தகுதியான நபர்களை மட்டும் நம்பும் பழக்கத்தை இவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் பிரச்சினைதான்.
https://www.manithan.com/spiritual/04/248002?ref=recomended-manithan
பிறந்த திகதியை வைத்து உங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.
பிறந்த எண் 1
1, 10, 19 மற்றும் 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டமானவராக கருதப்பட்டாலும் அவர்கள் அதிகம் செலவழிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதனையும் மீறி அவர்கள் தொடர்ந்து செலவு செய்தால் அவர்கள் கடினமான பொருளாதார பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.பிறந்த எண் 2
பிறந்த தேதி 2, 11, 20 மற்றும் 29 ஆகிய திகதிகள் இருப்பவர்களின் பிறந்த எண் 2 ஆகும். பிறந்த தேதி 2 ஆக இருப்பவர்கள் எளிதில் பதட்டமடைய கூடியவர்களாக இருப்பார்கள். சிலசமயம் சிறிய சறுக்கல்கள் கூட அவர்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடும்.பிறந்த எண் 3
3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 3 ஆகும். இவர்களின் பலவீனம் என்னவெனில் அவர்கள் தங்களின் செலவுகளை திட்டமிடுவதில் எப்பொழுதும் கோட்டை விட்டுவிடுவார்கள். தன்னை விட சிறப்பாக செயல்படுபவர்கள் மீது இவர்களுக்கு எப்பொழுதும் பொறாமை இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் நிச்சயம் அவர்களின் இந்த பலவீனங்களை களைய வேண்டும்.பிறந்த எண் 4
4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் பலவீனம் அதிக உணர்ச்சிவசப்படுவதாகும். இதனால் அவர்கள் எப்பொழுதும் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். அதேசமயம் சிலசமயங்களில் மிகவும் பிடிவாதமாகவும் நடந்து கொள்வார்கள்.பிறந்த எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படும், இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.பிறந்த எண் 6
பிறந்த தேதி 6, 15 மற்றும் 24 ஆகா உள்ளவர்களின் பிறந்த எண் 6 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எங்கு சென்றாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவராக இருப்பார்கள்.இவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவதுதான். தகுதியான நபர்களை மட்டும் நம்பும் பழக்கத்தை இவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் பிரச்சினைதான்.
பிறந்த எண் 7
7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 7 ஆகும். இவர்கள் குறுகிய காலத்திலேயே வெற்றியை அடைந்து விடுவார்கள், இதனால் அவர்களுக்கு ஆணவம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதேசமயம் தன்னை விரும்புபவர்களை காயப்படுத்துவதை இவர்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.பிறந்த எண் 8
8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 8 ஆகும். இவர்களை மற்றவர்கள் அடிக்கடி தவறாக புரிந்து கொள்வார்கள். அதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.பிறந்த எண் 9
9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். இவர்கள் கடினமாக உழைக்க கூடியவராக இருந்தாலும் எப்பொழுதும் இவர்களை சுற்றி எதிர்மறை சிந்தனைகள் இருந்து கொண்டே இருக்கும். மூர்க்கத்தனமும், முன்கோபமும் இவர்களிடம் அதிகமிருக்கும் அதுதான் இவர்களின் பலவீனமும் கூட.https://www.manithan.com/spiritual/04/248002?ref=recomended-manithan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக