தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 நவம்பர், 2019

உடல் எடையை குறைக்கும் தமிழர்களின் அதிசய உணவு பொருள்! இஞ்சியுடன் கலந்து குடிங்க.... 7 நாட்களில் மாற்றம் உண்டு

தமிழர்களின் உணவுகள் புகழ் பெற பல காரணங்கள் உள்ளது. அப்படி ஒரு முக்கிய காரணமாக விளங்குவது மிளகு.
வெள்ளையர்கள் கூட நம் நாட்டில் முதன் முதலில் உள்ளே நுழைந்தது அந்த பொக்கிஷத்திற்காகத் தான்.
மிளகில் ஆன்டி-பாக்டீரியல் அதிக அளவில் இருப்பதால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால், மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை உடலினுள் நுழையும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, உடலில் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை தடுத்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மிளகையும் மஞ்சளையும் சேர்த்து உண்டால் அது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக மாறும் என்று உறுதியாக கூறியுள்ளனர். அது மட்டும் இல்லை, தீராத வியாதியாக இருக்கும் உடல் பருமனையும் மிக விரைவாக குறைத்து விட முடியும்.
மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ரத்த புற்றுநோய் ஆகியவற்றில் இருந்தும் இவை காக்கும்.
உடல் பருமனை குறைக்க அற்புத பானம்
  • வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை தூளாக்கி கலக்கவும்.
  • அத்துடன் சிறிது இஞ்சியை நசுக்கி போட்டு தினமும் காலையில் குடித்து வந்தால் உடலின் எடையை சீராக வைக்கும்.
  • மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்குமாம்.
தேவையானவை
  1. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  2. 1/4 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்
  3. 1/2 டீஸ்பூன் துருகிய இஞ்சி
  4. 1 கப் பால்
  5. 1 டேபிள்ஸ்பூன் தேன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து விட்டு, பின் அதனுடன் தேனை தவிர மற்ற பொருட்களை சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அவற்றை வடிகட்டி கொண்டு சிறிது நேரம் ஆறவிட்டு கடைசியாக தேன் சேர்த்து குடிக்கலாம்.
இவ்வாறு செய்தால் உடல் மிகவும் வலிமை பெரும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல விதமான நோய்களில் இருந்து காக்கும். உடல் எடையும் மிக விரைவாக குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக