தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, October 18, 2018

சீனர்களின் அழகிற்கும், அறிவுக்கும் என்ன காரணம் தெரியுமா?... இந்த ஒரு பொருளில் தான் அந்த ரகசியம் இருக்குதாம்!


நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களிலும் ஏதோ ஒரு பயன் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக காரணம் கருதியே ஒரு பொருளை நாம் உருவாக்குகிறோம். அது சிறு ஊசி முதல் பெரிய இயந்திரம் வரை, பல வகையான வகையில் அவை மனித குலத்திற்கு பயன்படுகிறது. சில பொருட்கள் இவற்றில் மருத்துவ தன்மை கொண்டதாக கூட இருக்கலாம்.
அந்த வரிசையில் முத்துவும் அடங்கும். நவரத்தினங்களில் ஒன்றான முத்து பல வகையில் நமக்கு நன்மையை தருகிறது. குறிப்பாக உடலின் ஆரோக்கியத்திற்கு, நோய்கள் ஏற்படமாலும் இது உதவுகிறது. எந்தெந்த வகையில் முத்து நமக்கு உதவுகிறது என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
முத்துக்கு முத்தாக...!
நவரத்தினங்களில் மிக முக்கிய ஒன்று இந்த முத்து. இதனை பல வகைகளிலும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம். நகையாக அணியலாம், ஆரோக்கியத்தை அதிகரிக்க சாப்பிடலாம், முகத்தை மினுமினுக்க பயன்படுத்தலாம். இத்தகைய பல்வேறு நலன்களை முத்து கொண்டுள்ளது.

சீனர்களின் முறை தெரியுமா..?
சீனர்கள் பல்வேறு பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அதில் இதும் ஒன்று. அதாவது, முத்தை அரைத்து இவர்கள் சாப்பிடுவார்களாம். இது மிகவும் மகத்துவம் பெற்ற முறையாக கருதுகின்றனர். குறிப்பாக சீனர்கள் இந்த முத்து பொடியை மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தினர்.

நகையாக அணியலாமே..!
நாம் தங்கம், வைரம், வெள்ளி போன்ற பல வித நகைகளை அணிகின்றோம். இதில் அதிக தனித்துவம் இந்த முத்திற்கு உள்ளதாம். ஏனெனில் இது பெறப்படும் இடம் சற்றே வித்தியாசமானது. கடலில் வாழும் சிப்புக்குள் இருந்து இந்த முத்தை நாம் பெறுகின்றோம். இதனை அணிகலனாக அணிந்தால் உடல் நலத்திற்கு நல்லது.

சுத்த தன்மை மிக்கது..!
முத்து மிகவும் தூய்மை வாய்ந்த பொருட்களில் நாம் சேர்த்து கொள்ளலாம். வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு மிகவும் வெண்மையாக இருக்கும், முத்தை அணிவதால் உடலில் தட்பவெப்பம் சீராக இருக்கும். இதனை ஆண்கள் பெண்கள் என இரு பாலினத்தவரும் அணியலாம்.

ஆயுளை நீடிக்குமா..?
சீனர்கள் பண்டைய காலங்களில் அவர்களின் ஆயுளை நீடிக்க வைக்க இந்த முத்து பொடியை பயன்படுத்தியதாக ஆய்வுகள் சொல்கிறது. இதில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் உடல் நலத்தை நன்றாக வைத்து கொண்டு, ஆயுளை அதிகரிக்க செய்யும்.
தெய்வீக பயன்பாட்டிற்கு...!
"ஷென் டானிக்"(shen tonic) என்பது சீனர்களின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். சீன மொழியில் ஷென் என்பதற்கு "தெய்வீக தன்மை" என்பது அர்த்தமாம். அவர்களின் கடவுள் மீது வைத்த நம்பிக்கையை இது குறிக்கிறது. இந்த முறையை செய்வதற்கு முத்து தான் முதன்மையான பொருளாக கருதப்படுகிறது.

சீனர்களின் புத்தி கூர்மைக்கு காரணம்..?
பல நாடுகளும் சீனர்களின் புத்தி கூர்மையை கண்டு வியந்துள்ளனர். இதற்கு ஒரு முக்கிய காரணியாக முத்து பொடி உள்ளதாம். இதனை சாப்பிடுவதால் IQ அளவு உயர்கிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவர்கள் தினமும் 1 கிராமிற்கு குறைந்த அளவில் இந்த பொடியை சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

இளமையான முகத்திற்கு...

சீனர்கள் மொழு மொழுவென இருப்பதற்கு ஒரு அற்புத காரணம் உள்ளது. அதுதான் முத்து பொடி. முத்தை பொடியாக அரைத்து கொண்டு முகத்தில் தடவினால் முகம் மிகவும் இளமையாகும். மேலும், இதில் உள்ள பயோ கெமிக்கல்ஸ் முகத்தின் செல்கள் சிதைவடைவதையும் தடுக்கும்.

எலும்புகள் மறு உற்பத்திக்கு...
எலும்புகள் பாதிக்கப்பட்டால் அதற்கு வேறெந்த முறையையும் சீனர்கள் பயன்படுத்துவதை விட இந்த முத்து பொடி முறையை செய்வார்களாம். இது எலும்புகளின் திசுக்கள், தசைகள், தோல் ஆகியவற்றை மீண்டும் உற்பத்தி செய்யுமாம்.
நிம்மதியான மனதிற்கு...
மிகவும் லேசான மனநிலையை பெற முத்து பொடி போதுமே. சீனர்கள் தங்களின் மன நிம்மதிக்காகவும், இலகுவாகவும் இருப்பதற்கு இந்த முறையை பயன்படுத்தினர். முத்து பொடி சாப்பிடுவதால் மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை குணமாகுமாம்.
ஊட்டச்சத்துக்களின் சங்கமம்..!
இந்த முத்து பொடியில் ஏராளமான ஊட்டசத்துக்கள் உள்ளன. குறிப்பாக கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து, செலினியம், காப்பர், ஜின்க், சிலிக்கான், இப்படி எண்ணற்ற தாதுக்களும் வைட்டமின்களும் இதில் இருக்கிறதாம். ஆதலால் தான் சீனர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தினர்.
சீன அழகிற்கு...!
அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த இந்த முத்து பொடியை சீனர்கள் தங்களின் முக அழகிற்கு பெரும்பாலும் பயன்படுத்துவர்களாம். இது அவர்களின் சருமத்தை மினுமினுப்பாகவும், பொலிவுடனும் மாற்றும்.

https://www.manithan.com/beauty/04/191361?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment