தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 நவம்பர், 2014

மிரட்டும் பனிப்பாறைகள் (வீடியோ இணைப்பு) !


பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் பனிப்பாறைகளை பார்க்கும் போது ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விடுவோம்.
மேற்கத்திய நாடுகளிலும் சீனா, அண்டார்டிகா பகுதிகளிலும் பனி நிகழ்த்தும் மாயாஜாலம் உலகப் பிரசித்தம்.
அர்ஜென்டினா- பெரிட்டோ மாரினோ கிளேசியர் (Perito Moreno Glacier)
அர்ஜென்டினாவில் உள்ள பெரிட்டோ மாரினோ கிளேசியர் என்ற பனிப்பாறைகளை குளிர்கால பார்ப்பது என்பது த்ரில் அனுபவமாக இருக்கும்.
இந்த பாறை 5 கிலோமீட்டர் நீளமும், 170 மீட்டர் கனமும், சுமார் 73 மீட்டர் உயரமும் கொண்டது.
ஆண்டெஸ் மலைத் தொடரிலிருந்து பனி உருகி, வழிந்து வந்து ஏரியில் கலப்பதால், ஆண்டுதோறும் இந்த பாறை வளர்ந்து கொண்டே இருக்கிறது.
ஐஸ்லாந்து- ஐஸ் குகை
வெந்நீர் ஊற்றுகளுக்கு பேர் போன இடம் என்றால் அது ஐஸ்லாந்து தான்.
மேலும் அந்தப் பகுதியில் காணப்படும் பிரமாண்ட பனிப்பாறைகளைக் குடைந்து, பல நூறு மீட்டர் தூரத்திற்கு வளைந்த உட்கூரைகள், வெடிப்புகள், பள்ளங்களை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்கள்.
இந்த உள் குகைகளில் சிலர் மலை ஏறுவது போல, ஏறி இறங்கி உற்சாகம் பெறுகிறார்கள். லாங்ஜோகுல் கிளேசியரில் இருக்கும் குகை தனித்துவமானது.
ஜப்பான்- ஜாவோ ஆன்சென்
ஜப்பானில் கி.பி.110ல் கண்டுபிடிக்கப்பட்ட பழைய வெந்நீர் ஊற்று இன்றும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
ஜப்பானில், ஜாவோ ஆன்சென் ஸ்கை ரிசார்ட் அருகே சென்றால், பனியில் அச்சுறுத்தும் அதிசயங்களைக் காணலாம்.
தனித் தனியாக எழும்பி நிற்கும் பனிப்பாறைகள் உண்மையில் ஆமோர் ஃபீர் மரங்கள்தான்! குளிர் காலத்தில் இவற்றின் மீது பனி கொட்டி, இவற்றை இப்படி ஆக்கி விடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக