தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 ஜூலை, 2014

காலிறுதியில் கலக்கல் அணிகள்


உலகக்கிண்ண காலிறுதிக்கு வலிமை வாய்ந்த நம்பர் 1 அணிகள் மட்டுமே நுழைந்துள்ளன.
ரவுண்ட்-16ல் வெளியேறிய அணிகள்
உலகக்கிண்ண தொடரில் 32 அணிகளில் பல அணிகள் லீக் ஆட்டத்திலே நடையை கட்ட சிலி, உருகுவே, நைஜீரியா, அல்ஜீரியா, மெக்சிகோ,கிரீஸ், சுவிட்சர்லாந்து,அமெரிக்கா ஆகிய அணிகள் ரவுண்ட்-16ல் வெளியேறிவிட்டன.
காலிறுதியில் உள்ள அணிகள்
காலிறுதியில் வலிமை வாய்ந்த அணிகளான பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா,பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கோஸ்டாரிகா,பெல்ஜியம் ஆகிய எட்டு அணிகள் நுழைந்துள்ளன.
கிண்ணம் யாருக்கு?
இந்த அணிகளில் கிண்ணம் வெல்ல ஜேர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரேசில் அணிகளுக்கு இடையே பலத்த மோதல் இருக்கும்.
சாதனை
இந்த உலகக்கிண்ண போட்டிகளில் 154 கோல்கள் போடப்பட்டுள்ளன. இது ஒரு சாதனையாகும். இதில் 5 கோல்கள் செல்ஃப் கோல்களாகும்.
தங்க சப்பாத்து
அதிக கோல் அடிக்கும் வீரருக்கான தங்க சப்பாத்துவை வாங்கும் போட்டியில் கொலம்பியாவின் ரோட்ரிக்ஸ் 5 கோல்களுடன் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்து 4 கோல்களுடன் லியோனெல் மெஸ்ஸி, நெய்மர், தாமஸ் முல்லர் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக