https://www.facebook.com/notes/1466482960256378/இன்றய தெய்வீக சிந்தனை(THOUGHT FOR THE DAY)
- Please see below for English version. Tq
- தியானம் என்பது கண்களை மூடி அமர்ந்து ஒரு உருவத்தை
- ஆழ்ந்து சிந்தித்தல் அல்ல, கண்களை மூடி ஒரு உருவத்தில் மனக்குவிப்பை ஏற்படுத்தும்போது
- மனம் இலகுவாக கட்டுப்படாமல் சலனபுத்தி கொண்டு நிலையற்ற நிலை அடையும் இது வெறும் மனக்குவிப்பே
- தவிர ஆழ்ந்த சிந்தனை தியானமல்ல.
- எப்போது எம் அலைபாயும் சலனமனம் மறைந்து கட்டுக்கு
- வருகிறதோ அப்போது மனக்குவிப்பு உறுதியடைந்து
- முன்னேறி ஆழ்ந்த சிந்தனை தியானமாக மாறி மெது
- மெதுவாக நாம் எம்மை மறந்து தியானித்த உருவையும் மறந்து சாமாதி நிலை அடைவோம்.
- இறுதியாக உருவம் அற்ற நிலை இதற்கு பின் நாம் ஆன்மா
- என்று அழைக்கப்படுவோம். பலர் பல விதபெயர்களால் அழைப்பர் , கவலை வேண்டாம்.
- நாம் தியானிக்கும் உருவை மாற்றி மாற்றிக் கொண்டிருந்தால்
- முடிவில்லாமல் தொடர்ந்து செல்லும். இது மனக்குவிப்பல்ல.
- ஆகவே நாம் ஒரு உருவில் இடைவிடாது தொடர்ந்து மனக்குவிப்பு
- செய்து அதில் பூரண உறுதி அடைந்து ஆழ்ந்த தியான சாமாதி நிலை எய்தி பேரானந்த தெய்வீகத்துடன்
- இரண்டற கலந்து இன்புற்று வாழ்வோமாக.
- =========அருளுகின்றார் அன்பு பாபா=========
- ==========ஓம் ஸ்ரீ சாயி ராம்==========
- வள்ளலாரின் தியான முறை இணத்துள்ளேன் படித்து பயனுறவும்.
- Yato Dharma Tato Jaja
- எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்.
- Victory is Where Righteousness Prevails...
- "ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்".
- அன்புறவுகளே நான் எப்போதும் நாம் / எம்/ எமது
- என விளிப்பது (தொடஙுகுவது) நானும் சாதாரண மனிதன் எனக்கும் இந்த மேலோரின்
- அறிவுரைகள் பொருந்தும் என்பது தான் இதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
- இன்னொருவருக்கு புத்திமதி சொல்லும் தகுதி எனக்கு கிடையாது ஞானிகள்/ உயர்ந்தோர் சொன்னதை எடுத்து விரும்பியவர் பயனுற பகிர்கிறேன் அவ்வளவுதான்.
- I have heard the proverb: Practice before you preach
- ஆக நான் மகான் அல்ல.
- உங்களில் ஒருவன்
- இதுவே உண்மை.
- நன்றி அன்புறவுகளே!!!
- அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருதியானம் செய்யும் முறை !
தியானம் செய்யும் முறை !தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .நம்மால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .நம் உடம்பின் ஐம புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் அனைத்தையும் பார்க்கிறோம் பார்க்கும் அனைத்தும் மனதில் பதிவாகிறது .கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது மனதை அடக்க வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால், இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய் குரங்கு அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் அடக்க முடியும் அதை கண்கலால்தான் அடக்க முடியுமே தவிர, வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.ஆதலால் கண்கள் உருவம் அற்ற, ஒளியை தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்த அனைத்தும் ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுதான் நினைவு அலைகளாக நமக்கு துன்பமும் துயமும் அச்சமும்,பயமும் தந்து கொண்டு வருகிறது .அந்த பதிவுகளை நீக்கினால் மனம் அமைதி பெரும்அந்த பதிவுகளை அகற்ற தீப ஒளி தியானம்தான் முக்கியமானதாகும் அப்படியே தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால் அந்த தீப ஒளியும் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்குஅதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் இதுதான் சத்தியமான உண்மையாகும் .மலம ஒழிப்பு என்பார்கள் அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள் மலம என்பது யாதெனில் ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்னும் ஐந்து மலங்களாகும்,அதற்கு மலம ஒழிப்பு என்பார்கள் தீட்சை என்பது யாதெனில் தீ+ட்சை என்பது மலம் ஒழிப்பு என்பது ஒழிவு அதற்கு மலம ஒழிப்பு என்று பெயராகும் பலபேர் விபரம் தெரியாமல் நிறைய பணம் கட்டி தேவை இல்லாமல் தியானம் யோகம தவம போன்ற தவறான வழிகளில் சென்று செய்து வருகிறார்கள் அப்படி செய்வது அறியாமையாகும் அறியாத மக்களை ஏமாற்ற நிறைய அமைப்புகள் உருவாகி விட்டதுஅறியாமை என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும் ,ஒழிக்க வேண்டும்கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்எண்ணில் கலந்தே இருக்கின்றான் .கையற விலாது நடுக கண் புருவ பூட்டுகண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .வள்ளலார் பாட்டு ,மேலே சொல்லியபடி செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும் ..நன்றி -கதிர்வேல
THOUGHT FOR THE DAY
THOUGHT FOR THE DAY AS WRITTEN AT PRASANTHI NILAYAM TODAY
<p>Date:</p>Thursday, June 05, 2014
<p>THOUGHT</p>FOR THE DAY
Meditation
does not mean simply sitting with eyes closed, contemplating on a Form. You may
close your eyes, and focus on the form. But if there is some fickleness in the
mind while meditating, then it becomes concentration and not contemplation.
When the fickle-mindedness fades away, then your concentration becomes steady
and turns into contemplation and slowly, you forget both yourself and the Form,
and attain Samadhi. Ultimately, there will be no Form – hence it is called
Atma. People give it different names. Don’t worry if you are worshipping one
Form over another – it is not the end; this is not concentration. Persist and
focus on the Form and see that it becomes steady. As you proceed further on the
path, your focus becomes fully steady and contemplation blossoms intomeditation. (My Dear Students, Vol 2, Ch 12, June 4, 2009) :-அன்பு Baba.
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 5 ஜூன், 2014
தியானம் செய்யும் முறை !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக