தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 ஜூன், 2014

சமையலறையில் மறைந்திருக்கும் பெண்ணின் அழகு!

அழகுக்கு செயற்கையான வழிகளை மேற்கொள்வதை விட இயற்கை வழிகளே நீடித்து நிற்கும்.
மேலும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது, அழகின் மேல் அக்கறை கொள்ளும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது சரும வறட்சியால் தான்.
இந்த சரும வறட்சியானது குளிர் காலத்தில் மட்டுமின்றி, கோடைக்காலத்திலும் சந்திக்கக்கூடும்.
கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைவதால், உடல் வறட்சியடைவதுடன், சருமத்தையும் வறட்சி அடையச் செய்கிறது. எனவே அழகை பராமரிக்க அன்றாடம் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
பொதுவாக மாய்ஸ்சுரைசர்களை கடைகளில் அதிக பணம் செலவழித்து தான் வாங்கி பயன்படுத்துவோம். அதிலும் அவைகளில் கெமிக்கல் கலந்திருக்கும்.
எனவே, உங்கள் சமையலறையிலேயே சில மாய்ஸ்சுரைசர்கள் மறைந்திருக்கின்றன.
அவகேடோ
பொதுவாக எண்ணெய் பசை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருக்கும். இதனால் வறட்சி ஏற்படாமல் இருந்தாலும், அதிகமாக எண்ணெய் வழியாமல் இருக்கவும், சூரியக்கதிர்களில் இருந்து பாதுகாப்பு தரவும், எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றவாறான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
அதற்கு அவகேடோ தான் சிறந்தது. இதனால் சருமமும் நன்கு பொலிவோடு, மென்மையாகும். எனவே அவகேடோவை மசித்து, சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொலிவிழந்து காணப்படும் சருமத்தை புத்துணர்வு பெறச் செய்யும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இதனை மசித்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
திராட்சை
திராட்சையில் சருமத்தில் ஈரத்தை தக்க வைக்கும், அதே சமயம் இறந்த செல்களை புதுப்பிக்கும் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால், இவற்றை சாறு எடுத்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்து வந்தால், சருமமானது பாதுகாப்புடன் பொலிவாகவும் இருக்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயிலும் ஈரப்பதத்தை தக்க வைக்கும் குணம் உள்ளது. எனவே இதனை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சருமத்தில் சிறிது நேரம் வைத்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பளிச்சென்று அழகாக மின்னும்.
தேங்காய் எண்ணெய்
வறட்சியான சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், வறட்சி நீங்குவதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி, சருமம் பொலிவாக காணப்படும்.
பப்பாளி
பப்பாளியை மசித்து தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சரும வறட்சி நீங்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக