தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

மர்மங்கள் நிறைந்த தியாகோ கார்ஷியா தீவு !!

தியாகோ கார்ஷியா (Diego Garcia) என்பது மலேசியா விமானம் காணாமல் போன பின்னர் அனைவரும் அறிந்த ஒரு தீவாக அறியப்படுகிறது.
அமெரிக்க தளம் அமைந்துள்ளதாக கூறப்படும், இந்த தீவு எங்கு இருக்கின்றது, அப்படி என்ன இந்த தீவில் உள்ள விசேடம் என வினாக்கள் எழுந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அது பற்றிய தகவல்களை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியினூடாக கனடாவில் உள்ள ஆய்வாளர் சுதர்மா பகிர்ந்து கொண்டார்.
தியாகோ கார்ஷியா என்ற தீவு இலங்கை மற்றும் மாலைதீவை விட மிகவும் அழகான தீவு. பூமி பந்தின் சொர்கபுரி என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமான கண்ணாடி தீவு.
நிலப்பரப்புக்கு உள்ளேயும் வெளியேயும் கடல் நீர் இருக்கின்றது. உதாரணமாக எடுத்து கொண்டால் இலங்கையின் வடக்கில் நந்திக்கடல் மற்றும் அதனோடு இருக்கின்ற பகுதிகளை ஒத்ததாக இந்த தீவு இருக்கின்றது.
இலங்கையில் இருந்து தெற்கே சுமார் 800 கடல் மைல் தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. இந்து சமுத்திரத்திற்கு மத்தியில் இருக்கும் இந்த தீவின் பின்னணியில் ஒரு துன்பம் சுமந்த கதை உள்ளது. இந்த கதையில் தமிழர்களின் பங்கும் இருக்கின்றது.
2001 ஆம் ஆண்டுக்கு பின்னரான அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையால் இந்த தீவு பிரபலமடைந்திருந்தாலும் அமெரிக்க படையினர் சுமார் 48 ஆண்டுகளாக அந்த தீவில் இருந்து வருகின்றனர்.
அமெரிக்கா இந்த தீவுக்குள் தந்திரமாக சென்றது. அங்கிருந்த ஆபிரிக்க பூர்வீக குடிகள் மற்றும் மொரீசியஸ் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக