நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு, பல ஆண்டுகளாக அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருந்த கோவில் வேற்றுகிரக வாசிகளால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்ற கோவில் முதலில் இந்து கோவிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோவிலாக மாறியதாக கூறப்படுகிறது.
உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரியதாக கூறப்படும் இந்த கோவிலின் கட்டமைப்பு இன்று வரை ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள இந்த கோவில் பல ஆண்டுகளாக அடர்ந்த காடுகளுக்குள் மறைந்து இருந்துள்ளது.
மேலும் உள்ளூர் மக்கள் இந்த கோவில் கடவுள்களாலோ அல்லது வேறு ஏதும் வேற்று கிரகவாசிகளால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதிவந்துள்ளனர்.
கி.பி 12ம் நூற்றாண்டில் இரண்டாம் சூரிய வர்மனால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக தெரிகிறது.
கெமர் என்றழைக்கப்படும் கம்போடிய மக்களின் கட்டடக் கலையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் பல ரகசியங்கள் புதைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது.
மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது.
நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ள இந்த கோவிலில், மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது.
இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
12ம் நூற்றாண்டிலேயே எந்த ஒரு தொழிநுட்ப வசதிகளும் இல்லாமல் எப்படி இவ்வளவு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டது என்று பல ஆய்வாளர்கள் அதிசயிக்கின்றனர்.
இதுபோன்ற பல மர்மங்கள் புதைந்துள்ள இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாவாசிகள் பெருமளவில் வந்துசெல்கின்றனர்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 8 நவம்பர், 2014
வேற்றுகிரக வாசிகள் கட்டிய கோவில் (வீடியோ இணைப்பு)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக