தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 நவம்பர், 2014

பெண் சுதந்திரம் என்பது ஆணை அடிமைப்படுத்துவதா??

பெண் சுதந்திரம் என்பது ஆணை அடிமைப்படுத்துவதா??


சம்பெயின் தந்த போதையோ,பீர் கொடுத்த போதையோ இந்தப்பேதை இப்படி புலம்புறாள்!ஆண் ஆண்டபோதே அந்த ஆணை ஆண்டு கள்ளக்காதலுக்காக நாட்டை நாசப்படுத்திய இவர்களை நாடி சீரழியாதே என  பட்டினத்தார் தொட்டு பல சித்தர்கள் கெஞ்சியும் அழகால் மயங்கிய ஆணினம் அழிந்ததே நிதர்சனம்!


தமிழ் கூட இவர்கள் தலைமை வந்தால் என்றோ அழிந்திருக்கும் என்பதற்கு இந்த பேதை போதையில் புலம்புவது ஆங்கில எழுத்தில் வருவதே ஆதாரம்!


இவர்கள் அடிமையாயிருக்க தலை மொட்டையாவது ஆண்களுக்கா?
என்ன மன அழுத்தம் இருந்திருந்தால் ஆண்கள் இப்படி ஆகியிருப்பார்!


இன்றும் வீட்டுக்காக உழைப்பதும் உருகுவதும் ஆண்களே!!காதல் வந்தவுடன் குடும்பமானம் போனாலென்ன,குடும்பமே இறந்தலென்ன என்று அந்த காமனுடன் ஓடுபவள் யாராம்??குடும்பத்துக்காக காதலை தியாகம் செய்தது இதுவரை யாராம்?


நீ ஏனம்மா வாள் ஏந்தணும் ,உன் வாயே போதுமே நாட்டையே அழிக்க!


ஆண்கள் சுதந்திரமாக எதில் உள்ளார்கள்??பிறந்ததில் இருந்து தாய் சொல்வதையே கேட்கிறான்,தந்தையை முறைக்கின்றான்!அண்ணனை அடிக்கின்றான்,அக்காவிடம் குழைகின்றான்!தங்கைக்காக உழைக்கின்றான்,தாரத்துக்கு பணிகின்றான்!பெண் பிள்ளை பிறந்தால் அவள் அழகு சாதனங்கள்,நகை,நட்டு என்றும் வீடு படிப்பு என்றும் உழைப்பதுடன் அவள் நீ உனது என்று ஒருமையில் பேச அதற்கும் அடிபணிகின்றான்!மருமகள் ஆட்சியில் குறுகி நிற்கின்றான்!!


குனிந்து குனிந்தே வாழும் அவன் போல வாழ ஆசைப்படும் பெண்ணே நீ உண்மையில் பேதைதான்!


எப்பொழுது நீ பெதும்பையாகி மங்கையாகி மடந்தையாகி அறிவையாகி தெரிவையாகி பேரிளம் பெண்ணாவாயோ!நடக்கிற காரியமா இது!பெண் புத்தி பின் புத்தி அன்றோ!அன்றே சொன்னதன்றோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக