சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட உயிருக்கே எமனாகிவிடும்.அதுமட்டுமின்றி அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும் பாதிப்பு அதிகம் தான்.
இந்த புகையை சுவாசித்தால் உடலில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை மாற்றும் பெறுவதுடன், உடல் எடையை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட உட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் பிக்மான் மற்றும் பால் ரெனால்ட்ஸ் ஆகியோர் எலிகளை கொண்டு இதனை நிரூபித்துள்ளனர்.
மனிதனின் செல்லில் செரமைட் எனும் கொழுப்பை தூண்டுவதன் மூலம் எடையை சிகரெட் புகை அதிகரிக்கிறது என்றும், இதனால் இதய கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக