தொடர்ச்சியாக கணயினை பயன்படுத்தி வரும் போது அதன் வேகம் குறைவடைவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.
இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்பட்ட போதிலும் வன்றட்டில் தற்காலிக கோப்புக்கள் சேருதல் மற்றும் கோப்புக்களின் ஒழுங்கமைப்பு சீரின்மை போன்ற காரணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவ்வாறு வன்றட்டில் ஒழுங்கின்றி காணப்படும் கோப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கு Disk Defragment எனும் செய்முறை பயனுள்ளதாக காணப்படுகின்றது.
இதற்கான வசதி விண்டோஸ் இயங்குதளத்தில் தரப்பட்டுள்ள போதிலும் Auslogics Disk Defragn எனும் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்தக்கூடியதாகவும், 6MB கோப்பு அளவுடையதுமான இம்மென்பொருளின் உதவியுடன் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் வன்றட்டினை Defragment செய்ய முடியும்.
http://lankasritechnology.com/view.php?24IAld0batr0Qd422AMe322cBnZ3edeZBBLc03e6AA2edMQ9rac02dOI43
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக