தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஆகஸ்ட், 2018

ஈழத்து வேந்தன் இராவணனின் தாயாரின் 60 அடி நீளமுள்ள சமாதி!


ஈழத்து வேந்தன் இராவணனின்
தாயாரின் 60 அடி நீளமுள்ள
சமாதி "கன்னியா"வெந்நீருற்றிற்கு
அருகில் உள்ள மலையில்
அமைந்திருக்கிறது!
பதிவி்ல்,இராவணனின் தாயார் சமாதி,கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் இங்கிலாந்து அருங்காட்சயத்தில் வைக்கப்பட்டிருக்கும் 18-ம் நூற்றாண்டின் இராவணன் சிலை...
ஈழத்தின் "கன்னியா"வெந்நீர் ஊற்று அருகில் உள்ள மலையில்,தமிழர்களின் முதல் மன்னன் ஈழ வேந்தனின் தாயார் சமாதி உள்ளது.இராவணன் தன் தாயாரின் ஈமக் கிரிகைசடங்குகளை செய்வதற்காக ஏழு வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கி ஈமை கிரிகளை செய்து முடித்தபின் அருகிலேயே தாயாரின் உடலும் புதைக்கப்பட்டது.இது வெளி உலகற்கு தெரியாமலேயே மறைத்து வைக்கப்பட்டது.
இதன் அருகில்தான் இராவணனின் தலைநகரான "திரிகூட"மலை(திருகோணமலை)அமைந்திருந்தது.கன்னியா வெந்நீர் ஊற்றைப் பற்றி தெரிந்த தமிழினம் இந்த 60 அடி நீளமுள்ள தாயாரின் சமாதியை மறந்தே விட்டனர்.இராவணனின் பாட்டி அவிர்பு கன்னியாக இருந்த பொழுது புலத்திய முனிவரை இங்குதான் கண்டார்.அகத்திய முனிவர் சிவலிங்கத்தை வைத்து பூஜித்த இடமும் இந்த "கன்னியா"இடந்தான்.
இவ்வளவு,பாராம்பரியமும் வரலாறும் உள்ள இடம் இன்று தமிழர்களின் கையிலிருந்து சிங்கள தேசத்திற்கு சென்று பல வருடங்கள் ஆகிறது.ஆனால்,தமிழர்களின் கையில் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக வரலாற்று சின்னமாக இருந்தது .
இராவணணின் பாராம்பரிய இடங்கள்,கன்னியா,அகத்தியர்,அவிர்பு,இராவணணின் தாயார் சமாதி என தமிழர்களே நிரம்பி வாழ்ந்த இடம்,இன்று இந்துக்களின் அடையாளங்கள்,வரலாற்று சின்னங்கள் என அழிக்கப்பட்டு புத்தர் சிலைகள் ஒவ்வொரு தெருவாரமும் நிறைந்து புத்த தேசமாக காணப்படுவது வேதனை!
தமிழர்கள் திருகோணமலைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இந்த "கன்னியா"விற்கு கொஞ்சமாவது கொடுத்திருந்தால் அல்லது சில கோயில்களையாலது கட்டியிருந்தால் இந்த இடங்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.ஆனால்,இன்று அந்த வெகுமதியற்ற பாரம்பரிய வரலாற்று இடங்களை இழந்து விட்டோம்!
இப்படியே சென்றால் இன்னும் 50 வருடங்களில் ஈழம் சிங்கள தேசமாகவே காட்சி தரும்!எள்ளாலன்,சங்கிலியன்,பண்டாரவன்னியன் முதல் இன்று வரை போராடிய தேசியத் தலைவர் வரை கண்ட கனவு நனவாக அனைத்து ஈழ மக்களும் துரோகம் அற்ற ஒற்றுமையுடன் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக