தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 மே, 2018

ஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள்: இப்படியும் ஒரு பாரம்பரியம்


உலகில் பராம்பரியம் என்கிற பெயரில் சிலரால் விசித்திரமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.
நவீன மாற்றத்தை எதிர்பார்த்து உலகம் பயணித்துக்கொண்டிருந்தாலும், இதுபோன்ற மக்கள் அதுபற்றி கவலையில்லாமல் தங்கள் பராம்பரியம் ஒன்றே தங்கள் வாழ்வில் முக்கியம் என்று நினைப்பார்கள்.
அதற்கு உதாரணமான ஒன்றுதான், ஒரே பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள்.
மத்திய பிரதேசத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மோரேனா எனும் கிராமத்தில் ஒரே பெண்ணை பலர் திருமணம் செய்துக் கொள்ளும் பலதாரமணம் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் வாழும் கிராம மக்கள், ஒரே பெண்ணை பலர் திருமணம் செய்துக் கொள்வதற்கு ஆண், பெண் எண்ணிக்கை சமநிலையில் இல்லை என்பதை காரணமாக கூறுகின்றனர்.

ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த பல ஆண்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர்.
அதுவே வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்களாம்.
மோரேனா எனும் இந்த கிராமத்தை சுற்றியிருக்கும் பல கிராமங்களிலும் இதை பாரம்பரிய சட்டமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்தியாவில் இன்னும் பல இடங்களிலும் இதுபோன்ற விசித்திர முறை பின்பற்றப்படுவது தெரியவருகிறது.

அந்த வகையில், உத்தர்காண்ட்டில் ராஜோ வர்மா எனும் பெண் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
அதேபோல ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஓர் இனத்தை சேர்ந்த மக்கள், அண்ணன் தம்பிகளுக்கு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

http://news.lankasri.com/lifestyle/03/178147?ref=ls_d_lifestyle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக