தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, April 2, 2018

மக்களிடமிருந்து ஹிட்லர் மறைக்க விரும்பிய புகைப்படம் இதுதான்


தன்னை மக்களில் ஒருவனாக காட்ட விரும்பி ஹிட்லர் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமும் பெரும்பாலும் கருப்பு வெள்ளையிலேயே உலகம் பார்த்த ஹிட்லரின் வண்ண வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அரை ட்ரவுசரும் சாக்ஸும் அணிந்து கால்களைக் குறுக்காக வைத்துக்கொண்டு ஹிட்லர் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அப்படி என்ன விசேஷம் அந்தப் புகைப்படத்தில்?
ஒரு காலத்தில் தன்னை மக்களில் ஒருவனாகக் காட்டுவதற்காக 1920ஆம் ஆண்டு ஹிட்லர் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது.

1933 ஆம் ஆண்டு பதவியேற்றபின், தனது சர்வாதிகார தோற்றத்திற்கு சற்றும் பொருந்தாத அந்த புகைப்படத்தை மறைப்பதற்கு ஹிட்லர் பெரிதும் முயற்சித்தாராம்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் Viktor Lutze என்னும் நாசி ஜேர்மானியத் தளபதியின் வீட்டிலிருந்து பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவரால் இந்த அரிய புகைப்படம் அடங்கிய ஆல்பம் கண்டுபிடிக்கப்பட்டது. 70 ஆண்டுகளாக அந்த அதிகாரி அந்த ஆல்பத்தை ஒரு நினைவுப் பொருளாக வைத்திருந்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரில் உயிர் தப்பிய Viktor Lutzeஇன் மகனும் ஜேர்மானிய ராணுவத்தில் பணி புரிந்திருக்கிறான்.
ஒரு இளைஞனாக ஹிட்லருடன் அவன் நிற்கும் படங்களும் அவனது குடும்பப் படங்களும் அந்த ஆல்பத்தில் காணப்படுகின்றன.
அது மட்டுமின்றி பெரும்பாலும் கருப்பு வெள்ளை வீடியோக்களிலேயே உலகம் கண்ட ஹிட்லர், வண்ணத்தில் தோன்றும் வீடியோ ஒன்றும், வீடியோ எடுப்பதைக் கண்டதும் ஹிட்லர் பின்வாங்கும் வீடியோ ஒன்றும் கூட கிடைத்துள்ளன.





http://news.lankasri.com/germany/03/175468?ref=ls_d_germany

No comments:

Post a Comment