தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, January 30, 2018

அதிஷ்ட பார்வை உங்களை மட்டுமே பார்க்க இப்படி பண்ணுங்க..? கண்முன்னே அதிசயம் நடக்கும்!!


அனைவருக்குமே மகிழ்ச்சியான எந்த குறையும் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையிருக்கும்.
இந்த வகையில் அனைத்து செல்வங்களையும் அள்ளி தரும் மகாலட்சுமியின் பார்வையை வீட்டிற்குள் விழ வைக்க கூடிய ஒரு பொருள் தான் சங்கு...!
அப்படி என்ன மகிமை இருக்கிறது இந்த சங்கில்? இந்த சங்கினை வீட்டில் எப்படி வைக்க வேண்டும்? இந்த சங்கினை வழிபடும் முறைகள் என்னென்ன? என்பது பற்றி தொடர்ந்தும் படியுங்கள்...

சங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கே, வலம்புரி சங்கு எனப்படுகிறது. வலம்புரி சங்கை காதில் வைக்க, "ஓம்" என்ற பிரணவ சப்தம் வரும்.
வலம்புரி சங்கினை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜை செய்தும் வழிபட வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும்.
வலம்புரி சங்கானது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதனை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.
உங்களது வீட்டில் வலம்புரி சங்கினை வைத்து பூஜை செய்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது..
சந்தான பாக்கியம் கிடைப்பது தாமதமாகும் காரணத்தால் மனம் கலங்கி நிற்கும் தம்பதிகளின் மனக்கவலை விலக அவர்கள், வலம்புரிச் சங்கின் வாயிலாகக் குரு பகவானைத் துதி செய்தால், சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெற்று நிறை வாழ்வு எய்தலாம்.
அதாவது பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறுவதோடு, மனக்குறைகள் யாவுமே மாயமாய் மறைந்து விடும்.
சித்ரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால், கணவன்- மனைவி நல்ல ஆயுளுடன் வாழ்வார்கள்.

சங்கிற்கான மந்திரம்

ஓம் பாஞ்சஜன்யாய
வித்மஹே பவமானாய
தீமஹி தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்.... இதனை மிகவும் சத்தமாக உச்சரியுங்கள்.

http://www.manithan.com/religion/04/159844

No comments:

Post a Comment