தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 22, 2017

இலங்கையில் 106 வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர்! சாதனை மனிதர்

மத்துகமை பெலவத்தை முதலாம் கட்டை பிரதேசத்தில் வசித்து வரும் 106 வயதான அரச ஊழியரான டப்ளியூ.ஏ. லிவேரிஸ் தற்போதும் ஓய்வூதியம் பெற்று வருகிறார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர், மூத்த புதல்வரான ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரான ஏ.ஞானவிமல வீட்டில் வசித்து வருகிறார்.
1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்த லிவேரிஸ், 1950 ஆம் ஆண்டு அரச காணி அபிவிருத்தி திணைக்களத்தில் சேவையில் இணைந்துள்ளார்.
உரிய வயது வரை திணைக்களத்தில் பாணியாற்றி பின்னர் கடந்த 52 வருடங்களாக ஓய்வு காலத்தை கழித்து வருகிறார்.
42 பேரப் பேத்திகளை கொண்டுள்ள லிவேரிஸ், தனது கடந்த காலம் பற்றி கூறியுள்ளார்.
பெலத்தை ஊடாக தென் மாகாணத்தை நோக்கி செல்லும் பாதை நிர்மாணிக்கப்படும் போதே நான் காணி அபிவிருத்தி திணைக்களத்தில் சேவையில் இணைந்தேன்.
இந்த காலத்தில் மனித வளத்தை பயன்படுத்தி செய்யும் வேலைகளே அதிகம் இருந்தன. தற்போது போல் இயந்திரங்கள் அந்த காலத்தில் இருக்கவில்லை.
வீதியின் வேலை முடிந்த பின்னர் நாங்கள் மாவிளைச்சி பிரதேசத்திற்கு புதிய வேலை ஒன்றுக்காக சென்றோம். அங்கிருந்து அனுராதபுரம், கதிர்காமம், வண்ணாத்துவில்லு உட்பட பல பிரதேசங்களில் வேலைகளை செய்தோம்.
தற்போது எல்லாம் மாறிவிட்டது. எமது காலத்தில் நாங்கள் ஏதாவது ஒன்றை செய்தேம். அவற்றின் நினைவுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன. நாடு நன்றாக முன்னேறியுள்ளது. அனைத்து இடங்களிலும் வீதிகள் இருக்கின்றன. அந்த காலத்தில் ஒரு நாள் மேற்கொண்ட பயணத்தை தற்போது இரண்டு மணி நேரத்தில் முடித்து விடலாம். இந்த முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி.
எனது பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் குறித்தும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அனைவரும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.



http://www.jvpnews.com/community/04/154431?ref=ls_jvpn_d

No comments:

Post a Comment